ஆற்றுப்படுகையில் சற்றே ஆழத்
தோன்டினால் ஊற்றுக் கண்
திறந்து குழி நிரம்புவது போல
கண நேரச் சிந்தனை
பெருகி இருளோடு இருளாகி
இருளேயான பேருண்மை
தொடக்கத்தில் இருளே
நாதமே இருள்
இருளே நாதம்
ஆரம்பமும் முடிவும்
கலித்தேவன்
மேதாவித்தனம்
படைப்பின் தருனத்தை வெளிப்படுத்தும்
சொற்களின் பிணைப்பு
உற்சாகமான , லயமான இனிமையான
குறிப்பாலுணர்த்தும்
எழும் புலவன், புதுக்கவிதையின்
மரபிலாழ்ந்தவனை நீர் தூக்கிச்
சுமக்க வேண்டாம், உங்களின்
தேவைகளோ , வேண்டுதல்களோ
எமக்குத் தேவையில்லை
கவிதைக்கான தருணத்தை படைப்பதே
எமக்கிடப்பட்ட ஆனை
எடுக்கவோ கோர்க்கவோ முடியவில்லை எனில் வளர விடுங்கள்
அதீத மேதாவித் தனத்தால் முற்றுகையிடாதீர்
பின்தொடரும் நிழலின் குரல் கேட்கிறதா?
கலித்தேவன்
கடைசி ரீசார்ஜ் ?
மெயின் ரோட்டுக்கு
போகும் குறுக்கு சந்து அது .கொஞ்சம் பெரிய
சந்தும் கூட நுழைந்து நடக்கும் போது எதிரே வந்த காருக்கு வழிவிட்டு திரும்பி
நின்றேன். ஒரே நேரத்தில் ஒரு கார் ஒரு இருசக்கரவாகனம் செல்ல இடம் இருக்கும்..கார்
கடந்து போன பிறகுதான் கவனித்தேன் வலது கையால் வண்டியோட்டியபடி இடது கையில் செல்பேசியில் பேசிக் கொண்டு குமரன்
வருவதை.
ஆச்சர்யம்
தாங்கவில்லை நேற்று இரவு கடைசி மெசேஜ் போட்ட பிறகு ரீ சார்ஜ் முடிந்த விட்டதால்
அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. காலையில் வேலைக்கு வர வேண்டும் அதுவும் அன்று
முதல் நாள் என்பதால் அம்மாவின் போன் மூலமும் பேச நேரம் இல்லை . சரி வேலைக்கு
சேர்ந்து விட்டு அங்கிருந்து யாரிடமாவது வாங்கி பேசலாமென்றால் புதிய இடம் வேறு
தயக்கமும் பயமும் இருந்தது. மாலை வரை பதட்டத்துடனே நேரத்தை கடத்தியாகிவிட்டது . அதோடு வேலை
நேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பது மருத்துவமனையின் கடுமையான உத்தரவு
வேறு எப்படியோ வேலை முடிந்து வெளியே வரும் நேரமறிந்து என்னை பார்க்க வந்து
விட்டது மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும்
அளித்தது.
குமரன் என்னையும்
அங்கு எதிர்பார்கவில்லை முகத்தில் கோபம் கலந்த நகைப்புடன் இரு சக்ர வாகனத்தை ஒரு
ஓரமாக வாகனங்கள் போக வழிவிட்டு நிறுத்தி சைடு ஸ்டேன்ட் போட்டார்.
என்னாடி போன் பண்ணா
எடுக்கல . நேத்து நைட்டு போட்ட மெசேஜ்க்கு பதிலில்ல என்னதான் நா நெனக்குறது
சொல்லு.
பதில் சொல்ல
தடுமாறினேன். கண்களில் நீர் கோர்த்ததை மறைக்க முயன்றேன். எதிரே வந்த இரு சக்கர
வாகனத்தின் விளக்கின் வெளிச்சம் என் மீது ஒரு கணம் பாய்ச்சி மறைந்ததில்
கண்டுபிடித்து விட்டார். நகைப்பு மாறி பதை பதைப்புடன் என்ன சொல்வதென உதடுகள் இறுகி
மலர்ந்தது உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்
இல்ல ராத்திரியே
கடைசி மெசேஜ் போட்ட பெறவு ஜியோ ரீசார்ஜ் முடிஞ்சிருச்சி எனன் செய்யுறதுன்னு தெரியல
. புள்ளய அம்மாட்ட பாத்துக்க சொல்லிட்டு வேலைக்கு வர்ற அவசரத்துல அம்மா போன்லந்து பேசவும் முடியல பக்கத்துலேயே
உக்காந்துகிட்டு . கையில காசு வேற இல்ல ஒவ்வாரு தடவையும் ஒங்கள தொந்தரவு பண்ண மனசு
கஷ்டமாயிருக்கு நா என்ன செய்ய என்றேன்
சரிடி பரவாயில்ல
சொல்ல வேண்டியதுதானே . எனக்கு ஒரு செரமமும் இல்ல . உனக்கு செய்யாம யாருக்கு செய்ய
போறேன் . சரி இப்ப பேசலாமா ? நேரமிருக்கா?
இல்ல இப்ப இங்க
வேணாம் ஆஸ்பிட்டல்லந்து யாராவது வருவாங்க போவாங்க அதனால நா வீட்டுக்கு பஸ்
ஏறுனப்புரம் பேசுங்க . இன் கமிங் இன்னும் இருக்கு
சட்றென்று தலை
குனிந்தபடி குமரன் தலையாட்டி சரி உன்
விருப்பம் என்றபடி வாகனத்தை திருப்பிக் கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு போவதற்கு
எனக்கு பாதையை விட்டு விலகி சென்று விட்டார். முகம் மாறிவிட்டது மகிழ்சியாக இல்லை . என்னால் அவருக்கும் கஷ்டம்.
என் முகம் காட்டி குடுத்திருக்குமா? அவரிமிருந்து மறைக்க முடியுமா? என யோசித்தபடி
நடந்தேன்.
பேருந்து
நிறுத்தத்திற்கும் ஆஸ்பத்திரிக்கும் நூறு மீட்டர் தூரமே இருக்கும் பின்னால்
யாராவது வருகிறார்களா என பார்த்தவாரே பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன்
நல்லவேளை அன்றுதான்
பழக்கமான ரம்யா எனக்கு முன்னதாகவே வந்து விட்டதால் மனம் சீரடைந்து பதைபதைப்பு
குறைந்தது.
பேருந்திற்காக
காத்திருக்க துவங்கினேன் மணி ஏழுக்கு மேல் ஆகிவிட்டதால் வேலை முடிந்து வீட்டுக்கு
போவோர்கள், தங்களின் ஊர் போக
பரபரப்புடனும் சோர்வுடனும் ., செல்போனில்
தன் வீட்டாருடன ஏதாவது வாங்கி வர வேண்டுமா ? அல்லது நலம் விசாரித்தலும்,
பெண்கள் பேசுவது
வெளியே தெரியாமல் பேசுவதும் , மெயின்ரோடாகயால் ஒரே சத்தமாக இருந்தது.
மனம்
அமைதியடைந்தாலும் வேலை முடிந்து வீட்டுக்கு போகும் போது அஸ்பத்திரியின் ஒரு
பங்குதாரரான பெண் மருத்துவர் அழைத்து சொன்னது மனதிலோடிக் கொண்டிருந்தது .குமரன்
இதை எப்படி எடுத்துக் கொள்வார் . அம்மாவிடம் சொன்னால் என்னவாகும் மீண்டும்
வேலைக்கு தடை விழுமா ?எதிர்காலம் குறித்த
கவலை மெலிதாக படியத்துவங்கியது.
பேருந்து வருவதற்கு
இன்னும் நேரமிருந்தது. மனம் மீளமீள அதையே நினைத்தது . என்னையறியாமல் கண்களில் நீர்
பெருக்கெடுக்க ஆரம்பித்து . அங்கு வெளிச்சம் அதிகமில்லை என்பதால் புடவையால்
யாருக்கும் தெரியாத வன்னம் கண்களை துடைத்துக் கொண்டேன்.
கணவனால்
திருமணமானதிலிருந்து இரண்டு பிள்ளை
பெறுவது வரை கஷ்டம் . வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம்தான் கணவன் டிரைவர்
.தனியாக பல இடங்களுக்கும் உள்ளூர் சவாரியும் செய்து வந்தான். குடிப்பழக்கமும்
பெண்கள் சகவாசமும் உண்டு என்பது திருமணத்திற்கு பிறகே
தெரியவந்தது.ஆறுமாதத்தில் என் மீது
வெறுப்பும், சந்தேகமும் பட ஆரம்பித்தான்.பொறுமையாக இருந்து குடும்பத்தை
நடத்தினாலும் . என்னை கொடுமை செய்வது அவனின் வாடிக்கை. அது மேலும் மேலும் தொடர்ந்ததோடல்லாமல்
குடிப்பழக்கம்
அதிகமாகி வேலைக்கே போகாமல் குடித்து
விட்டு வருவதும். பணம் கேட்டு அடித்து அம்மாவிட்டிற்கு போக சொல்வதும் , கண்ட
நேரங்களில் உடலுறவுக்கு குடிபோதையில் வற்புறுத்தி வன்புணர்வு கொள்வதும்,
தொடர்ச்சியாக நடந்தது.நான் வேலை பார்த்த
ஆஸ்பத்திரியில் என்னுடன் வேலைகளை பகிர்ந்து கொண்ட ஆண்களோடு முடிச்சிட்டு பேசி .
சில சமயம் ஆஸ்பத்திரிக்கே போய் குடிபோதையில் வம்பிழுத்து விட்டு வருவதும்
நடந்ததால் . காவல் நிலையத்தில் புகாரளித்து அவர்கள் விசாரித்து இருபுறமும் பேசி
பார்த்தனர் அங்கு தலையாட்டி விட்டு வீட்டிற்கு வந்து இரண்டு மூன்று நாட்களில்
மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாக தொடர்ந்ததால் போலீசார் இது போல நிறைய தடவை நடந்துவிட்டது நீங்கள்
வழக்கறிஞர் மூலம் விவாகரத்து செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
வழக்கறிஞர்
இதற்கு கணவனும் ஒத்துழைக்க வேண்டும் அப்போதுதான் முடிவுக்கு வரும் என்றதால்
அம்மாவிடம் பேசி ஊர்பஞ்சயத்தில் வெட்டி விட்டு இப்போது அம்மா வீட்டோடு வந்து
விட்டோம். பிள்ளைகள் படிப்பு செலவு , வீட்டு செலவு ஆகியவற்றை சமாளிக்க பணம் தேவை
வேலைக்கு திரும்பவும் போக அம்மாவிடம் என் நிலையை விளக்க வேண்டியதில்லை . அவருக்கு
தெரியுமென்றாலும் புரிய வைக்க முயற்சித்து இப்போதுதான் வேலைக்கு சேர்ந்தேன் .
அம்மாவுக்கு நான்
கஷ்ட்டப் பட்டாலும் கணவனோடு வாழ்வதையே வற்புறுத்தினார் அவன் என்ன செய்தாலும்
பொறுத்துக் கொள்ள பல முறை என்னிடம் சண்டையிட்டார். இரண்டாவது குழந்தை பிறந்து
நான்கு வருடமே ஆகியபடியால் அம்மாவாலும் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாமல்
மிருந்த சிரமத்திலிருந்தேன். வேலையில் இருக்கும் நேரத்தில் குழந்தையை பார்த்துக்
கொள்ள ஒருவர் வேண்டும் தானே.
குமரனை கேட்டால்
உடனே ஏதாவது வேலை கிடைத்துவிடுமென்பதால்
அவரை தொடர்பு கொண்டேன். எனக்கு குமரனை திருமணத்திற்கு முன்பே தெரியும்.
அந்த
ஆஸ்பத்தியிலும் அவர் தான் எலக்ட்டிரிக்கல் துறையில் வேலையும், பராமரிப்பும் செய்து
வருவது தெரியும்
.இது போல நான்கு
மருத்துவமனைக்கும் அவரே பராமரிப்பு வேலைகளை பார்த்தார். என் நிலமைகளை முன்பே
அவருக்கு சொல்லியிருக்கிறேன், போதையோடு கணவன் வந்து சண்டையிட்டதும் அவருக்கு
தெரியும். அப்படி அடிக்கடி பேசிக் கொள்வதும் கஷ்டங்களை அவரிடம் சொல்லி ஆறுதலும்
அவ்வப்போது செலவுக்கு பணம் வாங்கிக் கொள்வதுமுண்டு . கணவனால் துன்பம் அதிகமானதால்
என் மனம் குமரனை நாட ஆரம்பித்தது அவர்தான் முதலில் என் மீதான ஆசையை
வெளிப்படுத்தினார்
அவருக்கு
திருமணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு . ஒன்று ஆண் ஒன்று பெண் .பெண்ணிற்கு
திருமணமாகி விட்டது . மகன் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறான். கணவன் மனைவியிடையே
மனப்பிரச்சனை ஏதுமில்லை . அவரின மனைவிக்கு உடல்நிலை எட்டு வருடங்களாக சரியில்லை
அவருக்கு அங்கு கிடைக்காத சுகத்திற்காக என்னை கேட்டார்.உடலிச்சையே குமரனை என்னை
அனுக தூண்டியது. பழைய பஸ் ஸ்டாண்டில் ஒரு முறை பார்த்துவிட்டு என்னிடம் பேச
வந்தார். இதற்காக மனைவியிடம் பேசிவிட்டு அவருடைய ஒப்புதலோடு தான் என்னிடம் பேச
வந்தார் என பின்னர் அறிந்தேன்.
எனக்கு ஒங்கிட்ட
ஒன்னு கேக்கனும் கேக் லாமா ?
கேளுங்க என்றேன்.
எனக்கு ரெம்ப
கஷ்டமா இருக்கு எப்படி சொல்றதுன்னு
புரியல ஆனாலும் சொல்லிட்டா தான்
நிம்மதி.எனக்கு நீ வேணும் ஓடனே பதில் சொல்லவேணாம் டையம் எடுத்துக்க அப்புறம்
சொல்லு. ஒரு வாரம் போதுமா?
இப்ப ஒனக்கு நைட்
டியூட்டி அடுத்த வாரம் பகல் டியூட்டில சொல்லிடு
எனக்கு அவர்
இதைத்தான் கேட்பார் என புரிந்து கொண்டேன் பெரும்பாலான ஆண்களின் குணம் எனக்கும்
தெரியும்.கணவனால் எந்த நன்மையும் இல்லை என்பதும் எனக்கும் ஆணின் துணை தேவை
சரிங்க நீங்க
இப்படி கேப்பிங்கனு முன்னாடியே தெரியும். உங்களுக்கு வசாயிடுச்சுன்னு கேக்காம
இருந்தேன். இல்லேன்னா மொதல்லயே நானே கேட்டுருப்பேன் என்றேன் சிரித்தபடி
என்னாம்மா சொல்ற என
அதிர்ந்தார்.
ஒங்க நடை , உடை.
அழகு உடல கட்டுமஸ்தா வச்சிருக்கிங்க . மொகம் கோணாம உதவி செய்யுறீங்க , அன்பு பாசம்
காட்டுறீங்க எனக்கு அது தான வேணும் வயசானா என்ன
பொம்பளக்கி அன்பும் பாசமும் மொகம் கோணாம பாத்துகிட்டா
அதுவே போதுங்க என்றேன்
பேருந்துகள்
வருவதும் போவதும் அதன் ஒலிப்பான்களும் லைட் வெளிச்சமும் எங்களை கடந்து சென்றது.
பேருந்து நிலையத்தின் எப்பக்கம் திரும்பினாலும் யாரோ உற்று பார்பது போன்ற
தோற்றத்தை தந்து கொண்டிருந்தது. பேருந்துகளில் பயணம் செய்வோரும் எங்களை பார்த்தும்
பாராமல் போவதாக கற்பனையான பரவசத்தை பரப்பி வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை
நிருபித்துக் காட்டியது.
அன்று நான் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை திருமணமான போது கூட இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படவில்லை.
அதன் பிறகு
இரண்டாவது குழந்தை என் கணவன் மூலம் உண்டாகும் வரை நானும் குமரனும் பல தடவை ஒன்றாக
இருந்தோம். குழந்தை பேறுக்கு அம்மாவிட்டிற்கு போனவள் இரண்டாண்டுகள் அவரை சந்திக்க
முடியவில்லை . பேச முடியவில்லை செல்போன்
உடைந்து பழுதாகியது என்னால் வீட்டை விட்டு வெளியில் போக முடியவில்லை . குழந்தை
பிறப்பிற்காக மருத்துவமனை வந்ததும்
குழந்தை பிறந்தது அறுவை சிகிச்சையால்
தான் நண்பியின் செல்போன் மூலம்
புகைப்படம் அனுப்பியிருந்தேன். பதிலாக அவரும் என் மகள் போல என செய்தி அனுப்பினார்.
மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்த்து விட்டு ஏதாவது உதவி வேண்டுமா ? என்றும் கேட்டார் நான் தான் உங்கள்
ஞாபகம் மட்டும் போதும் என்றேன்
மூன்றாவது ஆண்டில்
தான் செல்போன் வாங்க முடிந்தது அதுவும்
அவர் தான் வற்புறுத்தி வாங்கி தந்தார். அம்மாவிட்டிலும் சில நேரங்களில் அம்மாவின்
பேச்சை தாங்க முடிவதில்லை . ஏதாவது திட்டுவதும், மீண்டும் கணவனின் வீட்டிற்கு
போகச் சொல்வதுமாக இருந்தார்.
ஒரு தடவை கூட கணவன்
அவனாக குழந்தையை பார்க்க வரவில்லை அம்மா அழைத்த போது வந்து சமாதானம் சொல்லவில்லை.
என் உடல் மீதும் நான் எப்பொழுது வேலைக்கு போவேன் என்பதே அவன் கேள்வியாக இருந்தது .
எனக்கு சுத்தமாக அவனுடன் வாழ விருப்பமில்லாமல் போனது.
குழந்தை அழுவதும்
அதை சமாதானபடுத்துவதும் பசித்தால் பால் குடுப்பதும். அது செய்யும் சேட்டைகளும். ,
புன்னகையும் எனது துன்பத்தை ஓரளவு மறக்க வைத்தன.
செல்போன் வாங்கிக்
கொடுத்த பிறகு வாட்சாப்பில் மெசேஜ் போடுவதும் அடிக்கடி பேசுவதும் தொடர்ந்தது சில
மாதங்கள் அவரே ரீசார்ஜ் செய்தார். நேரில் பார்க போக முடியவில்லை குழந்தையை
பார்த்துக் கொள்வதால் நேரமில்லை
அவரைப் பற்றி
நினைக்கும் போதெல்லாம் ஓலை குடிசையின் ஓட்டை வழியே வழியும் சூரிய வெளிச்சமே ஞாபகம்
வரும் ஏனோ அதை பார்க்கும் போதல்லாம் பரவசமுன்டாகும். அன்பு காட்டுவது அதிர்ந்து
பேசுவதில்லை, கோபப்படுவதில்லை, எப்பொழுதும் கனிவான சொல்லே வரும். கோபப்பட்டாலும்
என்பொருட்டே கோபப்படுவார்.
நானும் அவரும்
ஒன்றாக இருந்த பல நிலைகள் மனதிலோடி உடலையும் மனதையும் முறுக்கி அவரை நினைத்து ஏங்க
வைத்தது.
ஒரு வழியாக
அம்மாவிடம் வேலைக்கு போக ஒப்புக் கொள்ள வைத்து. அவரிடம் பேசி இம்மருத்துவமனையில்
வேலை வாங்கிதர சொன்னேன் அவரும் ஒப்புக் கொண்டு மருத்துவமனையில் செவிலியாக வேலை
வாங்கி கொடுத்துள்ளார். இதற்கும் இப்போது வந்துவிட்டது ஒரு ஆபத்து.
பேருந்து என்
ஊருக்கு போகும் வழியில் சென்று கொண்டிருந்தது. இன்னும் குமரனிடமிருந்து
அழைப்புவரவில்லை.
பேருந்தில் கூட்டம்
குறைவாகவே இருந்தது. மழை பெய்வது போலிருந்தது காரணமா? தெரியவில்லை . மேலும் மனம் அதிக ஊளைச்சலில் இருந்தது.
பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறைமே எனது போனின் அழைப்பொலி
இதுவும் குமரனுக்கு
மிகவும் பிடித்த பாட்டு யாரென்று
பார்த்தேன் அழைத்தது குமரன் தான்
எடுத்தேன்
சொல்லுங்க
நா என்னா சொல்றது
நீ தானானே அங்க பேச வேணாம் பஸ் ஏறி கால்மணி நேரம் கழிச்சி பேசச் சொன்னே
எனக்கு அழுகை
முட்டியது அழுதுவிட்டால் என்ன ஏது எனக்
கேட்டு நாம் உண்மையைய சொல்லிவிட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன என என்னால்
தீர்மானிக்க முடியவில்லை
பேருந்திலுள்ளவர்களும்
உற்று பார்பது போல தோற்றமளித்து. ஒருவழியாக
சமாளித்து
அந்த டாக்டரம்மா
என்னைய கூப்பிட்டு பேசுனாங்க அத சொல்லத்தான் பேசச் சொன்னேன்
அதுக்கென்னடி, நா
தான் சொல்டேனே அதனலாதாண்டி வேலை குடுத்தாங்க அதுக்கென்ன இப்போ
அது இல்லங்க அவங்க
சொன்னது வேற
எனக்கு
கட்டுப்படுத்த முடியாத அழுகை வருவது
போலிருந்தது. பேருந்தும் மெதுவாக ஊர்ந்தபடியே சென்று கொண்டிருந்தது.
இதை எப்படி
குமரனிடம் செல்வது எனக்கு தெரியவில்லை.. ஒரு வழியாக மனதை சமாதானப்படுத்தி பெண் மருத்துவர் சொன்னதை சொல்ல தொடங்கினேன்.
வேலை முடிந்து
வீட்டுக்கு புறப்பட தயாரானேன் எனது டிபன்பாக்சை மதியமே சாப்பிட்டு முடித்ததும்
கழுவியதால் அதை பையில் வைத்து விட்டு முகம் கழுவி பொட்டு வைத்துக் கொண்டு வெளியே
வந்து வரவேற்பறையில் வெளியே செல்லும் நேரத்தை பதிவு செய்து விட்டு திரும்பும்பும்
போது பங்குதாரரான பெண் மருத்துவர் அழைப்பதாக வரவேற்பறையை கவனித்துக் கொள்ளும் பெண்
சொன்னார் .
உங்கள டாக்டர்
பாக்கனுமாம் இப்போதான் இண்டர்காமில் பேசினார் உடனே அவரோட Op
ரூமுக்கு போங்க என்றார்
சரிங்க . எந்த
பக்கம் இருக்கு நா இங்க வேலைக்கு இன்னிக்கு தான் சேந்தேன்
ம்.ok லெப்ட்ல போயி ஒரு
ஆறு ரூம் தாண்டுங்க அடுத்தது அவரோட op தான் என்றார்.
இடது புறம் நோயாளிகள் அமர நிறைய நாற்காலிகள் போடப்பட்டு
சுமார் இருபது நாற்காலிகள் வீதம் தனித்தனியாக பிரிக்கபட்ட ஆறு புறநோயளிகளை
பார்க்கும் பல மருத்துவ நிபுணர் பகுதிகளை கடந்ததும் பெண் மருத்துவரின் அறை வந்தது.
வெளியே பார்த்துக்கொள்ளும் பெண்ணிடம் கேட்டே போது உள்ளே அவர் இருப்பதாகவும்
நோயளிகள் யாரும் இல்லை நீங்கள் உள்ளே போகலாம் என்றார்.
அலுமினியத்தால்
செய்த தானே மூடிக் கொள்ளும் கதவை தள்ளி திறந்ததும் குளிரூட்பட்ட அறை என்பது
தெரிந்தது. அறையின் நடுவில் மிகப்பெரிய மரமேஜையின் மேல் அழகாக மெல்லிய சந்தன நிற
விரிப்பின் மேல் பேனா தாங்கிகளும் உடலில்லா தலைமட்டும் கொண்ட பெரிய புத்தர் சிலை
இடபுறமும் வைக்கப்பட்டு ஏராளமான மருத்து சீட்டுகள் கொண்ட நோட்டுகளும் சீராக அடுக்கப்பட்டு எடுக்க ஏதுவாக இருந்தன
அதன் பிண்ணனியில் ,பெண் மருத்துவர் கஞ்சி
போட்டு துவைத்து நன்றாக சலவை செய்த மடியு கலையாத புடவையில் தன் உடலின் பொன்நிறம்
நன்றாக துலங்குபடி அமர்ந்திருந்தார் .
நாற்பது வயது
சொல்லலாம் இன்னும் கண்ணாடி அணியவில்லை அனுபவத்தின் சுவடுகள் முகத்தில் தெரிந்தன .
கண்களின் நோக்குதலில் நிச்சயம் ஊடுருவி பார்க்கும் தன்மை அவரிமிருந்தது . ஏதோ
சொல்லவியலாத ஒருவித குரூரம் இருப்பதாக உணர்ந்தேன்
தயக்கத்தோடு அனுகினேன்.
வணக்கம் மேடம்
பாக்கனும்னு சொன்னீங்களாம் அதான்....
ம். உங்கிட்ட ஒன்னு
அவசியம் சொல்லனும் என பீடிகை
போட்டபடி இங்க இந்த ஆஸ்பிட்டல் மூன்று டாக்டர் பார்ட்னரா பாத்துக்குறங்க அதனால
மூனு பேருக்கும்
நல்லபடியா நடந்துக்கனும் . இங்க அரசியல்
பண்ணக்கூடாது உனக்கு தனியா சொல்றேன் என்றார்
சரிங்க மேடம்
இன்னிக்கு தான் வேலைக்கு சேர்ந்தேன் . நீங்க சொல்றபடியே நடந்துகிறேன் என்றபடி அவரை
பார்த்தேன்,
முகத்தில் சற்று
கடுமை கலந்த புன்சிரிப்புடன் விடை கொடுத்தார்
வெளியே போவதற்கு
திரும்பும் போது
ஏதாவது உதவி
தேவைன்னா என்ன பாரு என்றார் நானும் சரிங்க மேடம் என்று சொல்லி வெளியேறினேன்.
அத பத்தி
யோசிகிட்டே நடந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்புக்கு போற சந்துகுள்ள நுழையும் போது உங்கள பார்த்தேன்
இதுதான் நடந்தது என
போனில் குமரனிடம் சொன்னேன்.
சரி அவங்க
சொன்னாப்பல நடந்துக்க அங்க யார்ட்டடையும் அனாவசியமா பேச்சி வச்சிக்காத கண்டதையும்
பேசினதையும் ஒனக்குள்ள வச்சிக்க, வேல
கெடக்கிறதே கஷ்டம் . நா ரெம்ப மெனக்கெட்டு இந்த வேலைய
வாங்கிதத்துருக்கேன் அத சரியா பயன்படுத்திக்க என்றார்.
சரிங்க பாத்து
நடந்துகிறேன் , உங்களுக்கு கெட்ட பேர வாங்கிதர மாட்டேன் என்றேன் மன சஞ்லத்தை
அடக்கியபடி.
அவரும் போனை குட்நைட் சொல்லி கட் செய்து விட்டார்.
போனை வைத்ததும்
அடக்க முடியாத அழுகை மேலிட்டது நடந்ததை முழுமையாக சொல்ல முடியாத நிலமை ஏற்பட்டதை
நினைத்து கதறினேன்.
பேருந்திலுள்ளவர்கள்
என்ன இது எனப் திரும்பி பார்த்தவன்னமிருந்தனர் என்னருகில் இருக்கை காலியாக
இருந்தது . எனது ஊரை சார்ந்த பெண் என்னருகில் வந்து என்ன ஆச்சி ஏன் அழுவுற என்றாள்
நாள் சட்டென்று
சுதாரித்து கண்களை துடைத்தவாறு சின்ன
புள்ளய காலைலிருந்து பாக்க முடியல அதான் என்றேன்
அந்த பெண்
மருத்துவரின் op அறையில் அவர் சொன்னது.
நா நேரிடையாகவே
சொல்லிடுறேன் .
உன்ன வேலைக்கு
சேத்தது குமரன்னு தெரியும். எனக்கு
கல்யாணம் ஆகி டைவர்சும் ஆயிடிச்சி குழந்தை குட்டி இல்லே ரெம்ப வருசமா தனியாதான்
இருக்கேன் .
உனக்கும்
குமரனுக்கும் இருக்கும் உறவு எனக்கு தெரியும். குமரனோட பலவீனம் எனக்கும் நல்லா
தெரியும். அவரோட தேவை என்னான்னும் புரிஞ்சி வச்சிருக்கேன்.உன்ன பத்தி முழுசா
விசாரிச்சி வச்சிருக்கேன் .நீ இடையில் ரெண்டு வருசமா அவர பாக்கல . இப்ப எனக்கும்
அவரு வேணும் நீ விலகிக்கோ இல்லேன்னா நா ரெம்ப பொல்லாதவளா மாற
வேண்டியிருக்கும். குமரன கொஞ்ச கொஞ்சமா
மாத்திட்டு வர்றேன். நம்பிக்கை இருக்கு அவர எம்பக்கம் திருப்ப முடியும்னு .ஒரு
மாசம் வேலைக்கு வந்துட்டு வேலை புடிக்கலன்னு வேலைய விட்டுட்டு நின்னுக்கோ
அவ்வளவுதான் சொல்லுவேன் . என்ன பத்தி நீ எப்படி வேண்ணா நெனச்சிகோ .
இது என்னோட முடிவு
அப்புறம் உன்னிஷ்டம் .உன்ன ஏதாவது காரணம் சொல்லி வேலைய விட்டு நிப்பாட்ட முடியும்
. என்னைய புரிஞ்சிக்க முயற்சி பண்ணு என்றார்.
கலித்தேவன்
கடவுளின் கோரிக்கை
காலை நீண்ட நடை பயிற்சியின்
முடிவில் தேநீர் கடையில்
உடல் நலம் பற்றிய விவாதம் முற்றியது
கடவுள் படைத்தது நம்மை பரிசோதனை செய்வதற்கென முடிந்தது
எண்ணெய் பிழிந்தெடுக்கும்
சுட்ட வடையை தின்றாகிவிட்டது
மறுநாள் காலை தனித்து நடை பயின்ற போது கடவுள் எதிர்ப்பட்டார்
கவலை தோய்ந்த முகத்தோடு
கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார்
பதற்றமடைந்து ஏன் என வினவினேன்
உலக இன்பங்களில் படைத்தலலின்பமே
சிறந்தது
காண்பித்தார் சிறு கை வீசலில்
எதிரே திரையில் நான் தந்தையான
மகிழ்வின் தருனத்தை காட்டியது
மறு கை வீசலில் தாத்தாவானதை
திரையிட்டார்
போதும் போதும் என சொல்லத்தக்க
அளவுக்கு காண்பித்தார்
படைத்தலுக்கு உங்கள் துணையும்
ஈடுபாடும் தேவைதானே
தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களிடமே உள்ளது
இன்பங்களும் சேர்ந்து தானே வருகிறது
இரண்டையும் பழகிக் கொள்ளுங்கள்
வரும் கோரிக்கைளை கேட்க எனக்கும்
பதற்றம் தொற்றிக் கொள்ளுமே
கருணை காட்டுங்கள் என்றார்
தெருமுனை வரை வந்து காணாமல்
மறைந்தார்
ஒற்றை காலை நீட்டியபடி வெறும் தரையில் பாலீதீன் சாக்கை விரித்து
காய்கறிகளை கூறு கட்ட தொடங்கினாள்
ஒரு கிழவி
கலித்தேவன்
ஹைபிரிட்
திருமணத் தேவைக்கு அதிக அளவில்
பூக்கள் வாங்க பூச்சந்தைக்கு சென்றிருந்தேன்
சரேலன பெரிய பெரிய சாக்குப் பைகளிலிருந்து தலைகீழாக
கொட்டப்படும் பூக்கள்
ஒற்றையடிப் பாதையாய் விரியும் சந்தையில் மிதிபடும்
கண்கூச வைக்கும் மின்னொளியில்
கூச்சத்தோடு நெளியும்
பகலொளியில் மலரும் கணத்திலிருந்து
பறிகொடுத்த உரிமை
கை கொள்ளும் அளவுக்கு அழுத்தி பிடித்து எடைக்குவைக்கும் வலி
தீனமான மெல்லிய குரலுக்கு செவிசாய்த்தேன்
சந்தைக்கு வெளியே ஒதுக்கப்பட்டு
கொட்டப்பட்ட நேற்றைய பூக்களின் புலம்பல்கள்
வணிக நோக்கத்தோடு "ஹைப்பிரிட்" ல்
வளர்க்கப்பட்ட மணமில்லா ரோஜாக்களின் உற்சாக வரவேற்பு
பூக்களே பொறுத்துக் கொள்ளுங்கள்
உங்களைப் போலவே நாங்களும்
கலித்தேவன்
காலைத் தேநீர்
விடியற்காலை காலை நான்கு மணிக்கே
எழுந்து கொள்ளும் பழக்கத்தினால்
எனக்குத் தேவையான தேநீரை
தயாரித்துக் கொள்ளும் திறமையை
வளர்த்துக் கொண்டேன்
பக்குவமான கொதிநிலையிலும்
தயாரித்து முடித்து ஆவி பறக்கும்
மணத்தை நுகர்வது உடலினுள்
செல்லும் காற்றை அடி வயிறு வரை
உணர முடியும்
ஒரு வித போதையுணர்வையும்
மன ஒருங்கிணைப்பும் கிட்டும்
எங்கிருந்தோ வரும் அபரிதமான சக்தியால் உச்ச நிலையில் கூர்மையான
செவி திறப்பும்
அவ்வப்போது தேநீர் கோப்பையிலிருந்து
ஒவ்வெரு வாயாக பருகும் தேநீர் ஜென்
நிலைக்கு தள்ளும்
வாசிப்பதற்காக திறந்து வைத்திருக்கும்
புதத்தங்களின் பக்கங்கள் மூளையில்
ஒவ்வாரு சொல்லாக பதிவதை உணரமுடியும்
தேநீரின் சுவை நாவின் சுவையுணர்வு
மொட்டுக்களின் வாயை திறக்கும்
தருணம் உடலின் மெய்யுணர்வின்
வாசலில் உற்சாகத்தை வாவாவென
கூக்குரலிட்டு அழைத்தபடி கூத்தாடும்
கண்மூடி ரசிக்கும் நிலையில் விரும்பும்
இசையின் லயம் ஓடும்,பறவைகளின்
இனிய விளித்தல்களின் உற்சாகம்
செவியில்
துளித்துளியாக கடைசித் துளி
பிரபஞ்சத்தின் எல்லையென உணரும் தருனம்
கலித்தேவன்
கலித்தேவன்
சூட்சுமம்
நுண்ணுர்வுகள் கிளர்ந்தெழுந்த
சங்கமத்தின் எல்லையில்
தகுதி
தகுதியானவற்றுக்கும்
தகுதியுள்ளவைகளுக்கும்
விவசாயி
வறண்ட புணலினுடே
பசுமையின் கனவுகள்
தோற்றப் பிழை
தோற்றப்பிழை தரும்
கருத்துருவின் வலிமை
அடிப்படைத் தேவை
தேவை என்பதை விட
சூழல் எனலாம் ஒரு
இரண்டாவது
முதல் புத்தகம் படிக்க துவங்கி
முக்கால்பாகம் படித்துக் கொண்டிருந்த வேளையில்
நிலா
ஒரு நாள் இரவில்
வழக்கமாய் பயணிக்கும் பாதையில் இடது புறம்
சொல்
சொற்களில் பொருளின்றி
உச்சரிக்கபட்வை என்று உள்ளதா
பரம்பொருள்
குறுகிய நேரத்தில் வேலை
முடிந்தமர்ந்தேன்
தருணம்
ஒரே ஒரு கண நேர இன்பத்திற்காக முளைக்கும்
பரஸ்பரம் விழி தீண்டலின்
எதிர்பார்ப்பும், சுவாரஸ்யமான
நிகழ்வுகளும் இன்றி
ஆமை போல் நாட்கள் கழிந்தன
மருத்துவமனை புறநோயாளிகளின் பிரிவில்
வரிசையில் நிற்க நேர்ந்தது
சூட்சுமம்
நுண்ணுர்வுகள் கிளர்ந்தெழுந்த
சங்கமத்தின் எல்லையில்
தகுதியானவற்றுக்கும்
தகுதியுள்ளவைகளுக்கும்உன் மீது ஏற்பட்ட அதீதஈர்ப்பினால் கூர்மையான
உலை கொதிக்கையில் தள்ளாட்டமிடும்
உன் தொலைபேசி அழைப்பைகுறுஞ்செய்தியை தவிர்க்கநினைத்தாலும்
சூதாட்டத்தின் இறுதிவார்ப்பு போலதீவிரமில்லாமல்
எழுத வேண்டுமென்று
காலம்
சில வருடங்களுக்கு பிறகு
என் சிறிய மகளை
பெரிய மகள் படித்த
அதே பள்ளியிலிருந்து
அழைத்து வர
சென்றிருந்தேன் பள்ளி
விடுகையில்வெளியேறிய
பட்டாம்பூச்சி
சிறுமிகளில் எனது மகளை தேடினேன்
தோற்ற பிழையா?
அனைவரும் என் மகளாக
கலித்தேவன்.
காப்பு
அன்றாட தேவைகளின் தேவையால்
உழன்று உழன்று
மரத்துப் போய் சலிப்பேற்படுத்தும்
செயல்கள்
நீங்கின் கூடுகை இல்லை
தொடர்பின் தொடர்ச்சி இல்லை
திக்கெட்டும் திசையெல்லாம்
பற்றாக்குறையின் புன்சிரிப்பு
கானமயிலாட கடன் வந்துமேலாட
குத்தீட்டிகாரர்களின் நினைவு
பிள்ளைகளின் ஏக்கங்கள்
கனவுகளாய் கற்பனைகளாய்
வாழ்க்கை துணையின்
அதீத பிரமிக்க வைக்கும் ஈடுபாடு
சிதறிகிடக்கும் வாழ்க்கையின்
பாகங்களில் எரி நட்சத்திரமாய்
வீழும் இன்பங்கள்
எப்போதோ கிடைக்க போகும்
மான்யங்களின் வலை விரிப்பு
நிரந்தர மற்ற உயிருக்கு நிரந்தர
இயக்க மருந்து
இதையெல்லாம் தாங்கி ஓடும்
மனிதனுக்கு யார் காப்பு ?
கலித்தேவன்
கூக்குரல்
இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்
தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையை கூட்டின
வேண்டாம் வேண்டவே வேண்டாம் இன்று நீ
ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்கு பெறலாம்
ஊர்வலத்தினுடே வெளியேறும் வெறுமையில்
துடித்தடங்கும் இளமைதாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்
பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா?
கலித்தேவன்.
சுற்றுதல்.
ஊரைச் சுற்றி திரிகிறேன்
என்ற கெட்ட பெயர் எனக்குண்டு
நீ என்னையும் நான் உன்னையும் சுற்றியதால் தானே அத்தனையும் உண்டானது
இதிலென்ன ரகசியம்
நீயும் உன்னை சுற்றி நானும் என்னை சுற்றி
எல்லாம் எல்லாவற்றையும் சுற்றி
பிரபஞ்சமே சுற்றுகிறது.
கலித்தேவன்.
வெய்யில்
காலைக்குள் வேலைகளை
முடித்துகொண்டால்
மாலையில் மீதமிருப்பதை
பார்த்துக் கொள்ளாலாமல்லவா
உச்சமடைந்து கீழிறங்க தொடங்கும் போது அதிகமாவதை கண்டு
கதவடைத்து புழுங்கி அறை
வேக்காடைந்து மருகி
மின்விசிறிக் காற்றின் போதாமையால் கைவிசிறியாகி ஒற்றை
உடையில் மாலை காற்றில் "அப்பாடடா" என்ற போது
மாலைத் தென்றலின் கண்மூடி அனுபவிக்கும் இன்பவருடல்
கலித்தேவன்
வழி
நினைவுக்குள் எழும் கேள்விகள் முழுமையை காட்டாமல் கைக்கெட்டும்
தூரத்தில் நின்று கெக்கலிட்டு
சிரிக்கும்
பதில்கள் கண்டடைய முடியா
மன அடுக்களின் ஆழத்திலிருந்தவாரே முட்டிக் கொண்டு வெளியேற துடிக்கும்
மன ஓர்மையின் குவிப்பால்
ரெண்டும் கெட்டான் நிலையில்
உந்தி வெளியேரும் பதில்
தன் சந்தேக நடையால்
போகுமிடத்தின் வரைபடத்தில்
பல்வேறு வழித்தடத்தில் தன் தடத்தை தேடி தனித்தலையும்
கலித்தேவன்
பதம்
பதம் பார்த்து பார்த்து
கூர்தீட்டப்பட்ட வாளை அதன்
உறையை விட்டு எடுக்க
வேண்டாம்
முதலில் எடுக்கப்பட்ட வாளின்
வாரிசுகள் போட்டி போட்டுக்
கொண்டு விதவிதமாய்
வளர்ந்து , வளர்த்துக்கொண்டு
இருக்கிறார்கள்
உங்களை எடுக்க சொல்லி
கட்டாயப்படுத்தும் கவர்ச்சியான உறை
ஆழ்மனதில் படிந்து தூங்க
விடாமல் செய்யும் உறை
வடிவங்கள் மாறினாலும்
இறுதி ஒன்றுதான்
நட்பினிடையே தோண்டப்பட்ட
பள்ளம்
மூடுகையில் தெரியும்.
கலித்தேவன்
பயன்
எண்ணக் காடுகளின் குவிப்பை வன்ம நெருப்பாலிட்டு உருக்கி
வார்த்து வெறுப்பின் நஞ்சை
தடவி ஏய்ததால்
குறி நோக்கி பாயும் தோறும்
விரிசல்,
செயலிழப்பு
அடர்ந்த இருளுக்குள் இருளாய் மிதித்து விரிசலனூடே அமிழ்தப்படும் உண்மையின்
பல ரூபங்கள் வரும்
காலங்களில் தன்னிச்சயாக வெளியேறும் சமயங்களில்
மண்டியிட்டு கதறி என்ன பயன்
கலித்தேவன்.
கூடு
கலைத்த தேன் கூட்டை
விட்டு வெளியேறும் ரீங்காரம்
அங்கே தொட்டு இங்கே தொட்டு
நெடுந்துயர்த மரம் தொட்டு
ஏறி அடைய முடியாத மலை பாறை அடியில் தொட்டடைந்து
சிறைபட்டு பரிசோதனையின்
முடிவில் செயற்கையாய்
கண்ணாடி பெட்டிக்குள்
எப்பொழுதும் தொடும் தூரத்தில் என் கூடு
கலித்தேவன்
தேடலுக்குரிய எண்களை
தேடிக் கொண்டிருக்கும் போது
சினுங்கியபடி தலை குனிந்து வெட்கத்துடன் நின்றது
எண் எட்டு
ஏனிந்த சினுங்கல் என்ற போது
மேலும் வெட்கமடைந்து தலை கவிழ்த்துக் கொண்டது.
வெட்கமும் , நானமும் கொண்டாதால்
பேச்சிழக்கும் அபாயம்
தட்டுத்தடுமாறிகட்டவிழ்தாலும்
உன்மத்தமடைந்து சற்றே
தெளிந்து
ஒன்றுகூடவிருக்கிறோம் அல்லவா என்றது.
கலித்தேவன்
டவர்
நகரத்தின் நடுவிலோ ,
அடுக்குமாடி குடியிருப்புகளின்
மொட்டைமாடியிலோ
ஊரின் ஒதுக்கு புறத்திலோ
பல முட்டு சந்துகளிலோ
வானுயர்ந்து அன்னாந்து பார்க்க
வைக்கிறோம்
கண்ணுக்கு தெரியாத ஒலி
அலைகளாக மின்சாரம்
மாற்றப்பட்டு எங்களின் வழியாக
கோடி கோடி மக்களை
ஒருங்கிணைத்தாலும்
புவியின் அங்கமான பறவைகளுக்கு
எதிரிதானே
துண்டாடப்படும் சக்ரவட்டம்
மறுக்கப்படும் ,இயந்திர உணர்வுகள்
இரண்டும் அறிவிப்பதென்ன
கலித்தேவன்.
ஒளி ஊடுருவல்
அகத்தில் பாய்ந்த ஒளி உடலை
ஊடுருவி முழுவதும் ஒளிர்ந்தது
கூடுதலாக என்னப்பா மகிழ்ச்சியாயிருக்க
ஒன்றுமில்லை
அகத்தின் அழகு என்றேன்
பீறீட்டு வெளியாகும் போதாமையை புன்னகையின் ஒளியால் பரவச் செய்தாய்
முழுமையடைய மறுப்பே துணை
தேடிக் கொண்டிருப்பதை விட அறிவில் அறிவதே ஆனந்தம்
துயரில் நுனி நாக்கே பெரும் எதிர்
வளைய வரும் கோள்களா காட்டும்
வழியெய்யறிவதே நோக்கு
ஈர்ப்பின் ரகசியம் ஈர்க்கப்படுவதே
ஒளிப்புள்ளி ஈர்க்கப்பட்டு
ஜோதியாவது
மூழ்குவதும் இரண்டற கலப்பதும்
தூய ஈர்ப்பின் இருப்பு
தனிமைத் தேனை பருகுவதின்பம்
விருப்பு வெறுப்பு இயல்பாகும்
எதையும் ஏற்றுக் கொள்ளலில்
தெளிவு
அகமும் புறமும் ஒன்றான பின்னே
வெளி ஒன்றுண்டோ?
கலித்தேவன்
கடவுள் இருக்கிறார?
மேஜை மீதிருந்த உலக உருண்டையில் கைவைத்து
பார்த்துக் கொண்டிருந்த மகள்
கேட்டாள்
பூமி இப்படித்தான் இருக்குமா
திரைப்படங்களில் காட்டுவது போல
அப்படித்தான் இருக்குமென நம்புகிறேன் நானும் நேரில் பார்த்ததில்லை என்றேன்
அடுத்தது எதிர்பார்த்த கேள்வி
கடவுள் உலகை படைத்தாரா?
நிச்சயமாக எனக்கு தெரியாது
யாரும் ஆதாரப்பூர்வமாக சொல்லவில்லை என முணுமுணுத்தேன்
இதற்கு மட்டும் முணுமுணுக்குற
என்றாள்
யாருக்கு தெரியும் பக்கத்திலிருந்து
பார்த்துக் கொண்டிருந்தாலும் இருப்பார் என என் அப்பா சொல்லியிருக்கிறார்
கலகலவென வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள்
கலித் தேவன்
ஆறாவடு
உடல் முழுவதும் சோப்பை கரைத்து
பூசிக்கொண்டு அழுக்கு போக
குளிர்ந்து கொண்டிருந்தேன்
முழங்க காலுக்கு மேல்
தொடையருகில் வடு ஒன்று
தட்டுப்பட்டது ஆறாவடு
ஆண்டுக் கணக்கில் நீண்டதென்றாலும்
தொட்ட கணம் ஸ்பரிசத்தின் மனக்காட்சி
உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆட்டம்
படக்காட்சி நீள வேண்டியதில்லை
கணப் பொழுது போதும்
உள்ளிருந்து வரும் உணர்ச்சிக்கு
மறைக்கும் தண்ணீரில் கண்ணீர்
துண்டாடப்பட்டு ஒதுக்கப்பட்ட வாழ்க்கை
நட்சத்திர உயர்வுக்கு மனவிரிவு
அறிவின் குறுக்கீடால் தடைபடும்
உடல் குளிர்ந்தது போதும்
நீர் சிதறல்களை துடைத்துக் கொண்டேன் படக்காட்சி முடித்து வைக்கப்பட்டது நிறைந்தேன்
குளித்து முடித்து விட்டேன்
கலித் தேவன்.
மறுத்தல்.
நிகழ்வுக்கு அப்பால் என்ன உள்ளது
காண புறப்பட்டோம்
ஒவ்வாரு கோணத்திலும் கண்டோம்
உண்மையை அறத்தின் செயலை
நெஞ்சத்தை பதைபதைக்கவோ
உறவுகளை வெட்டி விடவோ
முயன்றோம்
அவரவர் அறம் தடுத்தது
கேள்விகள் கேள்விகள் பதிலை தந்தன
ஒவ்வாரு கோணத்திலும் பதில்கள்
மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்.
பாசாங்கிலாத , மறுப்பு
தூய மறுப்பு
கலித்தேவன்.
உலகத்துக்கு ஒவ்வாதவன்.
கூட்டத்தில் பேச அழைத்திருந்தனர்
உள்ளபடியே நுண்ணுர்வு மிக்கவன்
தன்னை முன்நிறுத்தும் , சுயதம்பட்டம் இல்லாதவன்
கடந்து வந்த பயண நோக்கமறிந்தவன்
தன் பட்டறிவை பொதுவாக்கியவன்
உழைப்பின் சுவை, திடம்,பயனறிந்தவன்
தனி ஒருவனின் ஏக்கம்
வார்த்தை ஜாலத்தைறியாதவன்
யதார்த்த வாதத்தை முன்வைத்து நடப்பவன்
கூட்டத்தில் தனித்திருப்பவன்
கூட்டம் கூடியது தனக்கல்ல நிதர்சனமறிந்தவன்.
எல்லாவற்றுக்கும் மேலாக
உண்மையானவன்.
கலித்தேவன்
மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...