Saturday, 6 July 2024

இரண்டாவது

 

இரண்டாவது


முதல் புத்தகம் படிக்க துவங்கி

முக்கால்பாகம் படித்துக் கொண்டிருந்த வேளையில்
சற்றே பக்கங்களை புரட்ட மறுத்ததால்
இரண்டாவது புத்தகத்தை யாரோ படித்துவிட்டு பாதியில்
வைத்த இடத்திலிருந்து படிக்க
நேர்ந்தது 
கூடவோ குறையவோ நிகழ்வுகள் , சுவாரஸ்யம்
திருப்தியுடன் படித்தாலும்
முன்கதையை அறிய
படித்தவனை அனுகுவதா
புத்தகத்தை கேட்பதா
புத்தகத்தை எழுதியவனை
கேட்கலாமென்றால்
மறுபதிப்பு வரும் வரை
பொறு என்றான்
புத்தகம் சொன்னது முடிந்தவரை படி

கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...