தகுதி
தகுதியானவற்றுக்கும்
தகுதியுள்ளவைகளுக்கும்என்ன வேறுபாடு
அறிவின் நேர்மறைக்கும்
எதிர்மறைக்கும் இடையே
தோன்றும் அலசல்களா
பூர்ணம் அடையும் பூர்ணமா
எதிர்நோக்குதலின் வழியே
உண்மையை அளவிடுதலா
காத்திருப்பின் வலியறிந்த
சுயநலத்தின் தாக்கங்களா
நிருபணமாகாத யதார்த்த
வாழ்வின் அங்கமா
கேள்விகளின் சக்திவாய்ந்த
அழுத்தங்களால்
தன்னறத்தின் சுய வெளிபாடே
தகுதி என கொள்ளலாமா?
கலித்தேவன்
No comments:
Post a Comment