Friday, 12 July 2024

கடவுளின் கோரிக்கை

 

கடவுளின் கோரிக்கை



காலை நீண்ட நடை பயிற்சியின்

முடிவில் தேநீர் கடையில்

உடல் நலம் பற்றிய விவாதம் முற்றியது

கடவுள் படைத்தது நம்மை பரிசோதனை செய்வதற்கென  முடிந்தது

எண்ணெய் பிழிந்தெடுக்கும் 

சுட்ட வடையை தின்றாகிவிட்டது

மறுநாள் காலை தனித்து நடை பயின்ற போது கடவுள் எதிர்ப்பட்டார் 

கவலை தோய்ந்த முகத்தோடு

கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார் 

பதற்றமடைந்து ஏன் என வினவினேன்

உலக இன்பங்களில் படைத்தலலின்பமே

சிறந்தது 

காண்பித்தார் சிறு கை வீசலில் 

எதிரே திரையில் நான் தந்தையான

மகிழ்வின் தருனத்தை காட்டியது

மறு கை வீசலில் தாத்தாவானதை 

திரையிட்டார் 

போதும் போதும் என சொல்லத்தக்க

அளவுக்கு காண்பித்தார்

படைத்தலுக்கு உங்கள் துணையும்

ஈடுபாடும் தேவைதானே

தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களிடமே உள்ளது

இன்பங்களும் சேர்ந்து தானே வருகிறது

இரண்டையும் பழகிக் கொள்ளுங்கள்

வரும் கோரிக்கைளை கேட்க எனக்கும்

பதற்றம் தொற்றிக் கொள்ளுமே 

கருணை காட்டுங்கள்  என்றார்

தெருமுனை வரை வந்து காணாமல்

மறைந்தார்

ஒற்றை காலை நீட்டியபடி வெறும் தரையில் பாலீதீன் சாக்கை விரித்து

காய்கறிகளை கூறு கட்ட தொடங்கினாள்

ஒரு கிழவி




கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...