சூட்சுமம்
நுண்ணுர்வுகள் கிளர்ந்தெழுந்த
சங்கமத்தின் எல்லையில்கட்டவிழ்ந்த இச்சை
அதிதீவிர இயக்கத்தில் மூழ்கி
விவரிக்க இயலா தருணங்களின் தொடர்ச்சி
ஆதியில் இருந்தது இப்போதும்
இருந்தது
எண்ண முடியாத கல்பகோடிகள்
தொடங்கியது யார்?
உன்னுள் விதைத்தது எது?
கொடுத்ததை
விதைக்க அறுக்க மட்டுமே
அனுமதி
கச்சிதமான வடிவமைப்பில்
இல்லை குளறுபடி
உணர்வுபூர்வமாக
உணரவைத்தலலின் நெகிழ்ச்சியில்
சூட்சுமம் புரிவதெப்போது
கலித்தேவன்.
சூட்சுமம் புரிவதெப்போது
கலித்தேவன்.
No comments:
Post a Comment