தருணம்
ஒரே ஒரு கண நேர இன்பத்திற்காக முளைக்கும்
பரஸ்பரம் விழி தீண்டலின்உடலிச்சையின் தீவிரம்
விளையாட்டில் யூகிக்க முடியாத
சிக்கலின் வியூகம்
தானாய் வசமாய் சிக்கிய இரை
பொருட்படுத்தும்படியான தூண்டிலில் மாட்டியதும்
மெல்ல மெல்ல புதை மணலின்
புதையல்
எச்சரிக்கை மணி ஒலித்தும்
ஆழ்ந்த மனமயக்கம்
கூடலின் தருணங்களை தீட்டும்
மெளனம்
துணையின்றி துணையோடு போகும் தூரோக கால்களின்
பாதைக்கு முடிவுதான் என்ன?
உடலடங்கும் நேரத்தில் உயிர்த்தெழும் எண்ணங்களை
சுடுகாட்டு தீயில் சுட்டாலும்
போகாதே
இன்னொரு மரத்தில், கிளையில் வந்தமரும் பறவை
கலித்தேவன்
No comments:
Post a Comment