பரம்பொருள்
குறுகிய நேரத்தில் வேலை
முடிந்தமர்ந்தேன்பொழுது போகாமல் சுற்று சூழலில் கவனம் உள்ளே
வெம்மையில், ஒயாத மன அலைகள், ஒப்பிட முடியாத
இறுக்கம் , முகங்களில் தீவிரம்
புண்ணகையின்றி
உறக்கமில்லா இரவுகளில்
நேருக்கு நேர் சந்திக்கவியலா
உண்மையின் துன்புறுத்தல்கள்
புணர முடியாத தாபத்தின்
பிறழ்வுகளின் முடியாட்டம்
தலைவிரித்தாடலில் தொடங்கி
உயிரடங்குதலில் முடிந்தது முடிந்ததா? முடிந்ததா? முடிந்ததா?
வெட்டு பரப்பின் பக்கவாட்டிலிருந்து
கிளைபரப்பி படர்ந்த துரோக
சிந்தனைகள்
இந்திரிய ஊற்றிலிருந்து மரபனுவாய் பின் தொடர்ந்த
வான் நீலத்தின் முடிவிலியாய்
என்றும் நிலைத்திருக்கும்
பரம்பொருளே
கலித்தேவன்
No comments:
Post a Comment