Saturday, 6 July 2024

சூட்சுமம்

 

சூட்சுமம்


நுண்ணுர்வுகள் கிளர்ந்தெழுந்த

சங்கமத்தின் எல்லையில்
கட்டவிழ்ந்த இச்சை
அதிதீவிர இயக்கத்தில் மூழ்கி
விவரிக்க இயலா தருணங்களின் தொடர்ச்சி
ஆதியில் இருந்தது இப்போதும்
இருந்தது
எண்ண முடியாத கல்பகோடிகள்
தொடங்கியது யார்?
உன்னுள் விதைத்தது எது?
கொடுத்ததை
விதைக்க அறுக்க மட்டுமே
அனுமதி
கச்சிதமான வடிவமைப்பில்
இல்லை குளறுபடி
உணர்வுபூர்வமாக உணர
வைத்தலலின் நெகிழ்ச்சியில்
சூட்சுமம் புரிவதெப்போது

கலித்தேவன்.

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...