உன் தொலைபேசி அழைப்பைகுறுஞ்செய்தியை தவிர்க்கநினைத்தாலும்
சூதாட்டத்தின் இறுதிவார்ப்பு போலவிட்டதை பிடித்து விடலாம்
எனும் கனவுகள்
தோற்றோடும் ஆற்றின்
வெள்ளத்தில்
பிடிவாதத்தின் சிகரத்தில் நீ
பதற்றத்தில் இடைநில்லா பேருந்தில்
ஏறியவனின் தவிப்பு
மனம் குவிகயில் நிம்மதி
கண நேரத்தில் பற்கடிப்பு
நினைவுகளின் காம ஊறல்
தவிர்க்க தவிர்க்க பித்தின்
தொடர்ச்சியினால் தவிப்பு
தெரிந்தும் தெரியாதது போல
எப்பவும் நீ
கலித்தேவன்
No comments:
Post a Comment