Saturday, 6 July 2024

 



தகுதியானவற்றுக்கும்

தகுதியுள்ளவைகளுக்கும்
என்ன வேறுபாடு
அறிவின் நேர்மறைக்கும்
எதிர்மறைக்கும் இடையே
தோன்றும் அலசல்களா
பூர்ணம் அடையும் பூர்ணமா
எதிர்நோக்குதலின் வழியே
உண்மையை அளவிடுதலா
காத்திருப்பின் வலியறிந்த
சுயநலத்தின்  தாக்கங்களா
நிருபணமாகாத யதார்த்த
வாழ்வின் அங்கமா
கேள்விகளின் சக்திவாய்ந்த
அழுத்தங்களால்
தன்னறத்தின் சுய வெளிபாடே
தகுதி என கொள்ளலாமா?


கலித்தேவன்




வறண்ட புனலினுடே
பசுமையின் கனவுகள்
முற்றிய பித்தவெடிப்பின்
பாதங்கள்
வெறுமையான நீலவானத்தின்
கீழ் கருகும் உயிர்கள்
போதாமையின் திடீர்
வருகை, கயமை
உள்ளிருப்பின் போராட்டம்
வெளியிருப்பின் அகங்காரம்
தாளாமையின் துயரம்
எப்போதும் முடிவினிலே
இன்பம்
இங்கு இல்லை
இல்லவே இல்லை இல்லை
உயிரின் நீருக்காக ஏந்தியவனின்
கைகளில் பிச்சை காசு
அறிவே இல்லை
இல்லவே இல்லை இல்லை
நான்கு போகம் விளைவிப்பனுக்கு


கலித்தேவன்



உன் மீது ஏற்பட்ட அதீதஈர்ப்பினால் கூர்மையான

உலை கொதிக்கையில் தள்ளாட்டமிடும்
தட்டினை
ஒத்த மன அலைச்சுழலும்
விரிவுபடுத்தப்பட்ட , அதிவேக
விரைவு கொள்ளும் சாலையின்
போக்கு போல கால வெளியும்
காலம்காலமாக
காதலிப்பவர்கள்
சொல்கிற செய்கிற காரியம்
உனக்கும் எனக்கும் அப்படித் தானா
வந்ததும் போனதும் தெரியாத
திருட்டுப்பூனையின் காலடித்
தடத்தை கண்டுபிடிக்க இயலுமா?
களவாடியவனை கண்டுபிடிக்காத வரை
களவுகள் தொடரும்.

கலித்தேவன்.

 



உன் தொலைபேசி அழைப்பைகுறுஞ்செய்தியை தவிர்க்கநினைத்தாலும்

சூதாட்டத்தின் இறுதிவார்ப்பு போல
விட்டதை பிடித்து விடலாம்
எனும் கனவுகள்
தோற்றோடும் ஆற்றின்
வெள்ளத்தில்
பிடிவாதத்தின் சிகரத்தில் நீ
பதற்றத்தில் இடைநில்லா பேருந்தில்
ஏறியவனின் தவிப்பு
மனம் குவிகயில் நிம்மதி
கண நேரத்தில் பற்கடிப்பு
நினைவுகளின் காம ஊறல்
தவிர்க்க தவிர்க்க பித்தின்
தொடர்ச்சியினால் தவிப்பு
தெரிந்தும் தெரியாதது போல
எப்பவும் நீ

கலித்தேவன்

தீவிரமில்லாமல்

 தீவிரமில்லாமல் 

எழுத வேண்டுமென்று
கவிதைகள் எழுதியதில்
தீவிரம் தீவிரமாகியது
சொற்குற்றம் பெருட்குற்றம்
பொருட்படுத்தபடவில்லை
என் கவிதைகளே பேசின
தூங்க விடாமல் தட்டி
எழுப்பின
முரண்பாட்டை நீக்கின
இயற்கையை அலங்கரித்தன
சூழ்நிலையை அறிய வைத்தன
அழகை ஆராதித்தன
அறிவை துலக்கின
பெண்மையை ரசித்தன
உண்மையை புசித்தன
புதிய உலகின் வாசலை திறந்தன
தீவிரமில்லாமல் கவிதைகள்
எழுத வேண்டுமென்று.......


கலித்தேவன்.

காலம்.

 


காலம்


சில வருடங்களுக்கு பிறகு

என் சிறிய மகளை

பெரிய மகள் படித்த

அதே பள்ளியிலிருந்து

அழைத்து வர

சென்றிருந்தேன் பள்ளி

விடுகையில்வெளியேறிய

பட்டாம்பூச்சி 

சிறுமிகளில் எனது மகளை தேடினேன்

தோற்ற பிழையா?

அனைவரும் என் மகளாக


கலித்தேவன்.

காப்பு

 

காப்பு



அன்றாட தேவைகளின் தேவையால்

உழன்று உழன்று

மரத்துப் போய் சலிப்பேற்படுத்தும்

செயல்கள்

நீங்கின் கூடுகை  இல்லை

தொடர்பின் தொடர்ச்சி இல்லை

திக்கெட்டும் திசையெல்லாம்

பற்றாக்குறையின் புன்சிரிப்பு

கானமயிலாட கடன் வந்துமேலாட

குத்தீட்டிகாரர்களின் நினைவு

பிள்ளைகளின் ஏக்கங்கள்

கனவுகளாய் கற்பனைகளாய்

வாழ்க்கை துணையின்

அதீத பிரமிக்க வைக்கும் ஈடுபாடு

சிதறிகிடக்கும் வாழ்க்கையின்

பாகங்களில் எரி நட்சத்திரமாய்

வீழும் இன்பங்கள்

எப்போதோ கிடைக்க போகும்

மான்யங்களின் வலை விரிப்பு

நிரந்தர மற்ற உயிருக்கு நிரந்தர 

இயக்க மருந்து

இதையெல்லாம் தாங்கி ஓடும்

மனிதனுக்கு யார் காப்பு ?



கலித்தேவன்


கூக்குரல்

 

கூக்குரல்



இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்

தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையை கூட்டின

வேண்டாம் வேண்டவே வேண்டாம் இன்று நீ

ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின்  ஆட்டத்தில் பங்கு பெறலாம்

ஊர்வலத்தினுடே வெளியேறும் வெறுமையில்

துடித்தடங்கும் இளமைதாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்

பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா?


கலித்தேவன்.

சுற்றுதல்

 

சுற்றுதல்.



ஊரைச் சுற்றி திரிகிறேன்

என்ற கெட்ட பெயர் எனக்குண்டு

நீ என்னையும் நான் உன்னையும் சுற்றியதால் தானே அத்தனையும் உண்டானது 

இதிலென்ன ரகசியம்

நீயும் உன்னை சுற்றி நானும் என்னை சுற்றி

எல்லாம்  எல்லாவற்றையும் சுற்றி

பிரபஞ்சமே சுற்றுகிறது.



கலித்தேவன்.

வெய்யில்

 

வெய்யில்




காலைக்குள் வேலைகளை

முடித்துகொண்டால்

மாலையில் மீதமிருப்பதை

பார்த்துக் கொள்ளாலாமல்லவா

உச்சமடைந்து கீழிறங்க தொடங்கும் போது அதிகமாவதை  கண்டு

கதவடைத்து புழுங்கி அறை

வேக்காடைந்து மருகி  

மின்விசிறிக் காற்றின் போதாமையால் கைவிசிறியாகி ஒற்றை

உடையில் மாலை காற்றில் "அப்பாடடா" என்ற போது

மாலைத் தென்றலின் கண்மூடி அனுபவிக்கும்  இன்பவருடல்


கலித்தேவன்

வழி

 

வழி



நினைவுக்குள் எழும் கேள்விகள் முழுமையை காட்டாமல் கைக்கெட்டும்

தூரத்தில் நின்று கெக்கலிட்டு

சிரிக்கும்

பதில்கள் கண்டடைய முடியா

மன அடுக்களின் ஆழத்திலிருந்தவாரே முட்டிக் கொண்டு வெளியேற துடிக்கும்

மன ஓர்மையின் குவிப்பால்

ரெண்டும் கெட்டான் நிலையில்

உந்தி வெளியேரும் பதில்

தன் சந்தேக நடையால்

போகுமிடத்தின் வரைபடத்தில்

பல்வேறு வழித்தடத்தில் தன் தடத்தை தேடி தனித்தலையும் 


கலித்தேவன்

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...