இளமையின் தூது.
இளமைக்கே உரிய துள்ளில்
உற்சாகத்தில்
மருண்டு அலைபாயும் கண்களில்
அலட்சிய பாவத்தில்
இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொள்ளும் நடையில்
கிள்ளு கீரையாய் உதாசீனப் படுத்தும் பாட்டில் பிய்த்துக் கொள்ள
சரம்மாறி தோன்றும் வியப்பு
பேருந்தோ , கடையோ விட்டிறங்கியவுடன் இணைக்கும்
காதுக்கு வேலை முடிவது வீடா? கடையா?
வீதிகளில், ஜோடி சேருமிடங்களில்
கண்ணீருடன்
புன்னகையில் தன்னை மறந்து
விரிகையில் நம்பிக்கை
அதிவிரைவில் இணைந்து வேகத்தில் கசந்து பிரியும் விடை தருவது காதலா?
உடலுக்கு மட்டும என்றால் மனதுக்கு வாழ்க்கைக்கு எப்போது
கலித்தேவன்.

No comments:
Post a Comment