Wednesday, 4 September 2024





அரவணைப்பு


சிலின்டரின் குழிழை திருகி

அடுப்பின் காதையும் திருகி ஒரு

நொடியில் பற்ற வைத்தார்கள்

மனைவியும் மகளும்

மண்ணென்னை காற்று அழுத்தும் 

அடுப்பிலும் திரியிலும் சற்றே போராடி பற்றவைத்தார்கள் அம்மா அடுப்பை

அம்மாயியும், அப்பாயியும் விறகடுப்பில் புகையும் புகையில்

கண்ணெரிச்சலில் பேராடி போராடி 

பற்ற வைத்தார்கள்

நெருப்பு ஒன்றுதான் பொது

அன்பும் ,பாசமும்  ,பொறுப்பும்

காலங்கள் கடந்தாலும் நினைவுகளில் நீங்காமல் இருப்பது

எரிச்சலிலும்  மாறா அரவணைப்பு


கலித்தேவன்.


No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...