தியானத்திலமர்ந்த போது
தியானத்திற்கான மனநிலையை
உருவாக்கும் பொருட்டு , அமைதியான
சூழ்நிலையை உருவாக்க முயற்சித்தோம்.
தியானத்தில் அமர்ந்த போது உணவின் மணம் துல்லியமாய் அறிந்தோம்.
தியானத்தில் அமர்ந்த போது பச்சைக்கிளியின் குரலை கேட்டோம்
தியானத்தில் அமர்ந்த போது இடைவிடாத எண்ணங்களின் தொடர்ச்சி
தியானத்தில் அமர்ந்த போது கடன் கொடுத்தவரின் முகம் எதிரே
தியானத்தில் அமர்ந்த போது எப்போதோ மறந்து போன நண்பனின் ஞாபகம்
தியானத்தில் அமர்ந்த போது எண்ணங்களிடையே விட்டுவிட்டு மெளனம்
தியானத்தில் அமர்ந்த போது ........
கலித்தேவன்.
No comments:
Post a Comment