Saturday, 22 June 2024

 வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில்

வேலை நிமித்தமாக போகும், வரும்

போதும் தெருமுனையில் அமர்ந்து பூ

வியாபாரம்  செய்யும் பெண்ணை

பார்பது வழக்கம்

வியாபார நேரம் தவிர எப்பொழுதும்

காதில் செல்போன்

பேசுவது பக்கத்திலிருபவருக்குக் கூட

கேட்காதவன்னம் இருக்கும்

பேசும் போது அதிர சிரிப்பதும் வழக்கம்

பூக்களின் வெண்மை போல பல்

ரோஜாவின் ஆரோக்கியமான ஈறுகள்

மஞ்சளான ,தாமரையின் வெளிறிய

நிறமும் கலந்த முகம்

காலை கடை திறக்க அழைத்துக் கொண்டு வரும் கணவன்

அருகில் போதையோடு போகும் வரை 

தரையில் கிடப்பான்

மனம் விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்வு



கலித்தேவன்.

2 comments:

  1. நகரத்தில் வசிக்கும் பூக்கள்
    நிறம் மாறாமல்
    பூக்கும் மலர்கள்
    மலர்ந்த நொடியில்
    மணம் வீசும்
    தானே வீழும்
    நீலமும் ஒளியும்
    மழையும் துளியும்
    இசையும் ஒளியும்
    உயிர்களின் மணமும்
    இவையாவும் இணைந்து
    நாம் பார்க்க மறந்த அந்தியில்
    பூத்திருக்கும் நிலவுக்கு நிகராக

    ReplyDelete
  2. பூத்திருக்கும் வெண்மை
    கவிதை அருமை

    ReplyDelete

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...