உண்மையுணர்வு
கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் வழியில்
பயணம்
உண்மையின் முகம்பார்க்க கூசி
மண்டியிட்டு பிரார்த்தனை
செவி சாய்ப்பாரா? வாழ்க கோஷம்
முடிந்தது. மயக்கத்தில் வாழ்வை
வைத்திருந்தவன்
கூட்டம் கூடியவர்களின் தோள்களில்
அடிமையாகி உழைக்க காந்திருந்தனர்
இடறி விழ இருந்தோம்
குறிப்பானையின் கேள்வியில் சுடர் அழிந்தது
வயிற்றெரிச்சலோடு எவ்வளவு காலமிருப்பீர் ,
இருங்கள் காத்திருப்போம்
உணர்வுகளின் அடிப்படையில் வாழ்கை
என்றால்
சொல்லை வெளிப்படுத்தும் முன் இருந்தது உணர்வா , உணர்ச்சியா:
தொக்கி நின்றது கேள்வி
இன்னொருவர் நேரத்தை விரயம்
செய்ய அனுமதி இல்லை
காலம் பதில் சொல்லும் என்றது
உண்மையுணர்வு
கலித்தேவன்.
No comments:
Post a Comment