உரிமை ?💋
நீண்ட நாட்களுக்கு பிறகு
கண்களினுடே பார்க்க நேர்ந்தது
ஆழ்ந்த அன்பினால் விளைந்த
இனிய புன்னகையினுடே விலக்கம்
மன இறுக்கத்தினால் காமத்திலாடிய
பின்னே வெறுமையின் ஊற்று அதிகம்
சுரந்தது
இதழ்களின் சுழிப்பால் ஊறி வந்த
உணர்வுகள் ஒடுங்கின
மன இறுக்கம், உடலிறுக்கம், உறவிலக்கம்
காரியமே காரணமாக தொடர்வது
செயலிழப்பு
முன்னெடுப்பாரின்றி எழுந்தடங்கிய
சொற்களின் கொந்தளிப்பு முகத்திலறைய விழிகளின் ஓரத்தில் நீர்
அலைக்கழிக்கப்பட்டவனின் துயரம்
மருந்தடைக்கப்பட்ட வெடிகுண்டென
கையில்.
வீசி எறியுமுன்னே அதியற்புத புன்கையோடு மனக் காட்சி
இன்னாரு வாய்ப்பு
வாய்ப்புகளை எடுத்துக் கொள்வதா?
பெற்றுக கொள்வதா?
கலித்தேவன்.
No comments:
Post a Comment