Saturday, 8 October 2022

உறவு

 உறவு


உரையாடலை தொடர்வதா

சிந்தனை கீற்றில்

தெளிவின்மை 

ஞாபக இருப்பில் ஆழப்

பதிந்தது

விட்டு விலகுவதும் , மனதின்

இருளில் புதைப்பதும்

நீண்ட நெடிய பாதையில்

காற்றில்லா நேரத்தின் மரமாக

உனக்கு தெரியும் 

எனக்கும் தெரியும்

கடக்குமா 

புனைவின் சொற்களில் 

வாழ்க்கை பயணதில் எஞ்சுவது

சதுரங்க களத்தில் கலைந்து

கிடக்கும் காய்கள்

தொடங்கியதும் முடிப்பதும்

ஒட்டுவதும் பிரிப்பதும் 

அவன் செயல்





No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...