Wednesday, 29 June 2022

விதியா?


 விதியா?



ஆனந்த கடற்கரையில்

பேரானந்த அலைகள் மோதலில்

கால்களில் தவழும் 

அலை போர்வையில்

பனை மரக்காட்டில்

தூக்கனாங் குருவி கூட்டில்

பறவை நுழைகையில்

நடுரோட்டிலும் சாலையோரத்திலும்

அலைந்து திரியும் மனநிலை தவறியவர் செய்கையிலும்

எச்சில் ஒழுக ஆள்காட்டி

விரலை வாயில் வைத்த வண்ணம் மயக்கும் புன்னகையோடு

தன் தாயின் மீது கால்களால்

நடமாடுவதை 

தான் விரும்பும் பொருளுடன்,

பெண்ணுடன் கூடலின் உச்சத்தில்

நிகழும் பரவசம்

பிரபஞ்ச விதியாக பார்த்ததுண்டா

பரவசம் கிடைத்ததுண்டா?


கலியபெருமாள்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...