திரள் திராளாக
பொங்கி வரும் நினைவலைகளின்
தொகுப்பும்
கனவுகளில் சில நினைவுகளின்
ஒருங்கிலும் யானை துரத்தலும்
நாகம் தீண்டுதலும்
கண்மூடிதுயிலுக்குள்
நுழையும் கணத்தில்
உடலதிர்தலும்
கனவுக்குள் கனவுக்குள்
மிதத்தலும்
நினைவுக்கும் நினைவோட்டத்திற்கும்
இடையில் ஊடாடுவது
ஏகாந்தமா?
கண்திறக்கையில்
புறச்சூழலின் தாக்கம் உடல் முழுவதும் பாய
உடலும் உயிரும் இனக்கமாயின்
தூக்கமும் விழிப்பும் நிகழ்வது
உடலிடமா மனதிடமா?
😊 கலியபெருமாள்
No comments:
Post a Comment