உயிர்
உடல் உதிர்க்கிறதா,
உயிர் உடலை உதிர்க்கிறதா
கண்மூடி மனதில் நிகழும்
வயிற்றில் பிசையும்
உடலின் உள்ளே ஊடாடும்
வலியும் வேதனையும்
அறியும் நீ நான்
ஏன்
கள்ளியில் வடியும் பாலை
போல மெய்யானதா
மெய்
கேள்வியில் பதிலில்
தெளிவடையுமா?
செயலில் அடையுமா?
விடையும் இல்லை கேள்வியுண்டு
தனித்தனி பாதைகள்
எல்லைகள் உண்டா
உருக்கப்பட்டு சிதறிய வெள்ளி
சிதறல்கள்மின்னும்
கண்ணாடி விளக்கில் ஒளிரும்
வெம்மை
உயிரறியும் உயிரேயறியும்
கலியபெருமாள்

No comments:
Post a Comment