மிருதங்கம்.
மிக நீண்ட காலமாக பழக்கத்தில்
புழுக்கத்திலிருந்தது போல
வழவழப்பு
வார் பிடித்து வார்பிடித்து இறுகி
தயாராக இருந்து
சாதகத்தில் தன்னை மறந்த நிலையில் அனுதினமும் வெளிபடும்
உற்சாகம்
தொடையில் குழந்தையை தட்டி தூங்க வைப்பது போல
குழந்தையின் மெல்லிய மூச்சு
அறை எங்கும் வியாபித்தது
தன் நிலை மறக்க
சுருதி மீட்ட இசைக்கோவை தட்டலில்
தெறித்து சிதறியது
தட்ட தட்ட மயக்கத்திலாழ்தோர்
தலையை மட்டும் ஆட்டினர்
நான் மட்டுமே இருந்தேன் என்னோடு
கலித்தேவன்


