மொழி
மொழியின் வீச்சை உணர துடித்தான் ஒரு நீண்ட
வாழ்க்கை தேவைப்பட்டது
சொற்களின் வழியே நிறுவ தலைப்பட்டான்
வார்த்தைகள் சுனக்கம் காட்டின , இலக்கியத்துக்காக
எதை பின்
தொடர வேண்டும்
சொற்கள் உள்ளே கோர்க்கப்பட்டு
ஒலியாக பரிணமித்தது
ஓலியினை பின்தொடர முடியுமா?
பிரார்த்தனை ஒலியை பின்தொடர்ந்தவள் சந்தித்த
நிகழ்வுகள் என்ன?
கற்பனையின் உச்சத்தில் மொழியின் சிறப்பு இலக்கியத்தின்
பக்கங்களில் நிரம்பின
மொழிகளுக்குள் கண்டடைவதின்
கூறுகளுக்குள் சிக்காமல்
வெளியேறி வால்பிடித்து ஓடி
தப்பித்தன சொற்கள்
கேள்விகள், கேள்விகள், கேள்விகள்
பதில்களை தேடின
பிடி கொடுக்காமல் நழுவி ஓடியது
ஒலியை பின்தொடர்ந்தவளின்
மொளனம் பேசியது , பதில்களை தேடியது.
கலித்தேவன்.
ஒளியை பின் தொடர்ந்தவள்
ReplyDeleteஅருமை
நல்ல கற்பனை, கவி வளத்துடன் கலியபெருமாளுக்கு வார்த்தைகள் வசப்படுகின்றன; வாழ்த்துகளுடன் .
ReplyDelete