ஆஸ்பிடலின் இடதுபுறம் நுழைந்து இடது புறமே உள்ள பிளட்டெஸ்ட் லேபுக்கு பக்கத்தில் இருக்கும் அந்த இடைவெளியில் பைக்கை நிறுத்திவிட்டு லாக்செய்து டூல்ஸ் பையை எடுத்துத் கொண்டு பெரியவாசப்படி வழியாக போய் வலதுபுறம் உள்ள ரிஷப்சனில் இருக்கும் ரூபனிடம்
ரூபன் என்ன ஆச்சி ஏதாவது ஃபால்ட்டா போன் பண்ணிங்க
ஒன்னுமில்ல 106 ல டியூப்லைட் எரியல லேபர் வார்டுலயும் டியூப்லைட் எரியல அதான் போன் பண்ணேன்
சரி கூப்டும்போதே சொல்லியிருந்தா டியூப் லைட்ட வாங்கிட்டேவந்திருப்பேனே ரெண்டு வாட்டி அலையனும், மொதல்லயே சொல்லகூடாதா ருபன்
அது இல்ல கோயிந்து மேனேஜர் இன்னும் வரல போன் பண்ணேன் எடுக்கல அதான் முன்னாடியே வாங்க சொல்லல ,அப்புறம் என்ன கேக்காம ஏன் இத பண்ணீங்கன்னு கேள்வி வரும் அதனால தான் சொல்லல
அப்போது ரிஷப்சன் அருகே வந்த ஒரு பையன் சார் எனக்கு தம்பி பொறந்திருக்கான் சாக்லேட் எடுத்துக்குங்க
நன்றி தம்பி வாழ்க வளமுடன் ரெண்டு சாக்லேட் எடுத்துக்கலாமா எனக்கு ரெண்டு புள்ளங்க ஒகே வா
ஒகே சார் உங்களுக்கு எத்தன வேணுமோ அத்தனை எடுத்துக்குங்க
மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த போது சாக்லெட்டை பொண்டாட்டிகிட்ட குடுத்துவிட்டு ஆஸ்பிடலில் பையன் பொறந்ததை சொல்லி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போய்ட்டேன் ,ஆனாலும் அன்று முழுவதும் ஏதோ ஒரு உறுத்தல் மனதை சரியாக வைத்து வேலை செய்ய முடியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. நடுஇரவில் தீடீர் விழிப்பு ஏற்பட்டு எழுந்து ஒக்காந்தேன் பழைய ஞாபகம் ஒன்று ,தலையிலேர்ந்து தொப்புள் வரைக்கும் ஏதோ இனம்புரியாத ஏதோ ஒரு உணர்வு , இரவுத் தனிமை எதையா இழந்ததை போல ஒரு படபடப்பு , யாரோ அறையின் முலையில் இருந்தபடி உற்று பார்பது போல ஒரு உறுத்தல் யாரும் இல்லை ,ஞாபகம் பதினாரு வருடத்திற்கு முன்பு நடந்ததை கண்முன்னே காட்சியாக தோன்றி மனதையும் வயிற்றையும் பிசைய ஆம்பித்தது தூக்கம் கெட்டதுமில்லாமல் ஞாபக அடுக்குகளிருந்து நடந்தவைகளை படக்காட்சியாக மனம் காட்டிக்கொண்டிருந்தது
முதல் குழந்தை பிறந்த உடனேயே துணைவியாருடன் கலந்து முடிவு செய்தேன் நான் பாக்கும் வேலைக்கும் கிடைக்கும் வருமானத்திற்கும் ஒரு குழந்தை போதும் அதை நல்லபடியாக வளத்துபடிக்க வைத்துவிட்டாலே கோடி புண்ணியம்னு
முதல் குழந்தை பெண்ணாக பிறந்தது நல்லதுன்னு நெனச்சன்
இரண்டு வருசம் போய்டுச்சி அப்பாவும் அம்மாவும் ஓயாம தொல்ல இரண்டாவது புள்ளய பெத்துக்கங்கன்னு
நானும் முடியாதுன்னு சொல்லி சமாளிச்சிகிட்டே இருந்தேன் , எம்பொண்டாட்டி நைசா எங்கிட்ட கொழந்தை பெத்துகுறத பத்தி பேச்செடுத்தா
அப்படியும் இப்டியும் எப்டியும் யோசிக்கலாம் மனுச மனசு அலைபாயாம இருக்குமா இல்ல கட்டிபோட தான் முடியுமா இரண்டு தடவ அபார்சன் ஆயிடிச்சி மனைவியோட உடல் நெலய கணக்கு பண்ணிட்டு நான் இரண்டாவது குழந்தை வேண்டாமுன்னு முடிவோட இருந்தேன்
என்னாங்க நாம ஏன் ரொண்டாவதா ஒரு புள்ளய பெத்துக்க கூடாது ஒன்னே ஒன்னு இருந்தா சரியா வராது அதனால ரெண்டாவதா பையனோ பொண்னோ பெறக்கட்டும் சமாளிச்சிக்கலாம் என்னா சொல்றீங்க
சரிதான் எப்படி சமாளிக்குறது வருமானம் பத்தாதே நானும் என்ன செய்யுறது வேற ஏதாவது தொழில் செஞ்சிதான் பாக்கனும்
இத பாருங்க இப்ப உட்டா அப்றம். சரியான நேரம் அமையுன்னு சொல்லமுடியாது பின்னாடி வருத்தப்படகூடாது என்னையும் குத்தம் சொல்லாதீங்க
ம் .எனக்கு கொஞ்சம் டைம் குடு யோசிக்கிறேன் அப்பாவும் அம்மாவும் தம்பியும் கூட என்ன சொல்றாங்கன்னு பாப்போம்
கிட்டதட்ட ஒரு மாதம் குழந்தை வேண்டியதை பற்றி நன்றாகவே பல கோணங்களில் யோசித்து பார்த்தும் ஒரு சரியான முடிவுக்கு வர முடியல சரி ஆனது ஆகட்டும்னு பெருமாள் மேல பாரத்த ஏத்திவிடுவோம்னு ஏத்திவிட்டாச்சி
நாளும் கிழமையும் பார்த்து பார்த்து நானும் அவளும் குழந்தைக்காக தவமா சேர ஆரம்பிச்சி கருவும் உண்டாயிடிச்சி
என்னாங்க ஒரு வாரம் தள்ளி போயிருக்கு உண்டாயிருப்போமோன்னு தோனுது செக்கப்பண்ணி பாத்துடவா
ஒகே செக்கப்பண்ணி பாத்துடலாம் அந்த ஸ்டிப்ப வாங்கிட்டு வரவா இல்ல வழக்கமா பாக்குற டாக்டர பாக்குறியா
ஸ்டிப்ப வாங்கிட்டு வாங்க பாத்துட்டு அப்புறமா போயிக்கலாம்
ஸ்டிப்ப வாங்கி அதவைச்சி மாசமா ஆனத உறுதிபடுத்தியாச்சி
குழந்தை உண்டானதை அப்பா அம்மாவிடமும் தெரியப்படுத்தி ஆசிர்வாதமும் வாங்கியச்சி
பொண்டாட்டி ரெம்ப ஜாலியா இருந்தா நானும் புள்ள எப்ப வரும்னு காத்திருந்தேன்
அஞ்சாவது மாசம்னு நெனக்கிறேன் காலையில குளிக்குறதுக்கு முன்னாடி பனியன கழட்டிட்டு திரும்பும் போது முதுவ பாத்தவ
என்னாங்க நல்லா முதுவ காட்டுங்க என்ன ரெம்ப அழுக்கா இருக்கே நல்லா முதுகு தேய்ச்சி குளிக்க மாட்டிங்களா சோப்பு போடும்போது கூப்டுங்க வந்து நல்லா தேச்சிவிடுறேன்
சரி சொல்றேன் வந்து தேச்சிவுடு
சோப்பு போடும் போது கூப்டேன் வந்து சோப்பும் கையுமா நல்லா முதுகு தேய்ச்சிவிட்டா
பாத்து தேச்சிவிடு வேற எங்காவது தேக்க போற
ஆமா ஒங்களுக்கு வேற வேல இல்லன்னு ரெம்ப வெக்கத்தோட சிரிச்சமாரி மூடோட பாத்தா
என்னாச்சின்னு தெரியல ரெண்டுபேரும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்து போய் ஒன்னு சேந்துட்டோம் பாத்துருமுலேயே, குளிச்சிட்டு வெளிய வந்தப்ப ஒன்னும் சொல்லல
மறுநா காலையில அவ மூஞ்சே சரியில்ல ஒரு மாதிரி இருந்தா மெகம் சோர்ந்த மரிபோ இருந்திச்சி
நேத்து நம்ம ஒன்னு சேந்தப்ப லேசா வலி வந்திச்சிங்க இப்ப கொஞ்சம் ரத்தமா போவுது எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல டாக்டர பாப்போமா
என்னா சொல்ற அதன் அப்பவே கேட்டேன் ஒன்னு சேரலாமான்னு இப்படி ஆயிடிச்சே குழந்தைக்கு ஒன்னும் ஆவாதே
அதெல்லாம் ஒன்னும் ஆயிருக்காதுங்க பயப்படாதீங்க நாம வேணுமின்னா செஞ்சோம்
சாயங்காலத்துகுள்ள ரத்த போக்கு அதிகமாயிடிச்சின்னு போன் பண்ணா
டாக்டர போய் பாத்தோம் செக்கப் செஞ்சி பாத்துட்டு ஸ்கேன் பண்ணி பாக்கனும்ன்னு சொல்லி அந்த ரிப்போட்ட பாத்துட்டு குழந்தை அசைவே இல்ல செத்து போச்சின்னு சொன்னாங்க இத ஊசி போட்டுதான் நார்மலுக்கு கொண்டு வர பாக்கனும்னு சொல்லி அட்மிசன் போட்டு ஊசியும் போட்டு குழந்தைய வெளியே எடுத்தாங்க
எங்கையில குடுத்தாங்க பாத்தா அஞ்சி மாச பையன் எங்கையில செத்து போய்
No comments:
Post a Comment