Wednesday, 27 April 2022

வானவில்


 

டேய் மச்சான் அவ என்ன பாக்குறளா இல்லையா? வேற எங்கியோ  யாரையோ பாக்குற மாரி தெர்தே


இல்ல மச்சான் உன்னதான் பாக்குறா நாமளும் தெனம் இதேநேரம் வந்து பாக்குறோம் அவ செய்யுற அலட்டலுல தெர்துடா


என்னாவோ மாச்சான் நீ சொல்றன்னு நம்புறேன் அப்பால அல்வா குடுத்துடபோறா


மாணிக்கமும் பெருமாளும் ஒரே ஸ்கூலில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் பக்கத்து பக்கத்துவீடு வேறு 

பெருமாளுக்கு அப்பா கிடையாது அம்மா, அண்ணன் தங்கை இவன் நடுவில் பிறந்தவன் நினைவு தெரியும் முன்பே அவன் அப்பா தவறிவிட்டார் அவர் விறகு தொட்டி (விறகு கடை) வைத்திருந்தார் அதை இப்போது அம்மா தான் பார்த்துக்கொள்கிறார் உதவியாக அண்ணனும் பெருமாளும் பார்த்துக்கொள்கிறார்கள் விறகு பிளந்து தருவதற்கு கூலிக்கு ஆட்கள் வருவார்கள் இரவுகளில் மாட்டுவண்டில் பெரிய பெரிய மரத்துண்டாக வருவதை கூலிக்கு ஆள்வைத்து அறுத்து பிளந்து விறகாக விற்பனை செய்வார் பெருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய குடும்பம் சற்று உள்ளடங்கிய தெருவில் நடுவில் அவன் வீடு முன்புறம் பாதியில் விறகு தொட்டியும் தொட்டியை ஒட்டி இடதுபுறம் இரண்டடி சந்துவிட்டு வரிசையாக மண்னை வைத்து கட்டப்பட்ட நான்கு வீடுகள் அதில் கடைசி  பெருமாளின் வீடு வீட்டின் பின்புறம் பெரிய இடம் அதில் பலவகையான மரங்கள் , வெட்டப்பட்டு பிளக்கப்பட்டு விற்பனைக்கும் பிளப்பதற்கும் தயாராக இருக்கும் அதிகமாக சீமை முள்மரம் தண்டாகவும் கிளைகளவெட்டி கொம்பாக நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புளியமரம்.,தூங்குமூஞ்சி மரம் ,கருவேல மரம் அதிகமும் சவுக்கு மரம் குறைவாகவே வரும் , பெயர் தெரியாத காட்டுமரங்கள் முண்டும் முடிச்சும்மாக நிறைய வரும், வேரில்முடிச்சி உள்ள மரங்கள் அதிகம் ஹோட்டலுக்கு தான் போகும் 

அதிகம் முடிச்சிள்ள மரங்களை சம்மட்டி பெரிய உளி கொண்டு தான் பிளப்பார்கள் அது ஒரே அளவாக வராது முடிச்சியுள்ள வேரின்பகுதிதான் நின்னு எரியும் அதிக நேரம் தாங்கி எரிந்து அதன் கங்கும் கரியும் நிறைய கிடைக்கும் மரம் அடுக்கியதுபோக சிறிய அளவில் மறைப்பு வைத்து குளியல் அறையும் காலை கடன்களை கழிக்க ஆண்களும் பெண்களும் சற்று தொலைவில் இருக்கும் ஏரிக்கு போவார்கள்


 ஒரே ஒரு அறை போல வீடு ஓடு போடப்பட்டது, நாலு வீடும் ஒரே அளவாகவும் கொஞ்சம் நீளமாக இருக்கும் ,வெளியே ஓடு நீட்டப்பட்டு கட்டில் போடும் அளவு இடம் ,வீட்டினுள்ளே எதையும் வைத்து மறைக்காமல் அடுப்பு அதிலேயே சமையல் இரவினில் அம்மாவும் தங்கையும் உள்ளே படுத்துக்கொள்வார்கள் பெருமாளும் அண்ணனும் கட்டிலில் தரையில் யாரவது ஒருவர் மாறி மாறி படுத்துக்கொள்வார்கள் குளிர்காலத்தில் நால்வரும் உள்ளே தான் 

மாணிக்கமும் பெருமாளும் தினமும் தொட்டிக்கு வெளியே பெஞ்ச் போல உள்ள கருங்கல் போடப்பட்ட இடத்தில் உட்கார்ந்து ராத்திரி ரெம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்குறது சமயத்துல அங்கியே படுத்து தூங்குறதும் உண்டு.


பெருமாளு அவ உன்னத்தான்டா பாக்குறா ஆன பேசமாட்டேங்குறா இந்த மாசத்துகுள்ள அவள்ட்ட நீ பேசனும்டா என்றான் மாணிக்கம்.


அப்டியாடா சொல்ற ஆனா இவ்வள நாளா போயி பாக்குறோம் பாக்குற மாரி தெரியுது ஆனா பேசவரமாரி ஜாட தெரியலியே


உனக்கு சமயத்துல மூள வேல செய்யாது பரபரப்பா அவ செய்யுற காரியத்த பாத்தா அப்டிதாண்டா தெரியுது.

பெருமாளும் மாணிக்கமும் இப்டி விளையாட்டு போக்காக முன்பு இருந்தபோது தான் அது நடந்தது ஸ்கூல் விட்டு வரும்போது கீழே கிடந்த மரக்குச்சியை எட்டி உதைத்து புட்பால் ஆட அது சற்று தள்ளி மார்பில் புத்தகத்தை அனைத்தபடி வந்த அவளின் மேல் விழுந்தது திட்டாமல் லேசாக சிரித்து விட்டு போக பெருமாளுக்கு தலைகால் புரியவில்லை முதல் முதலாக அவளை பார்த்தவன் திகைத்து நின்றுவிட்டான்


சற்று ஒல்லியாகவும் உயரமாகவும் முன்புறம் படிய வாரிய , பின்னால் குதிரைவால் போல பின்னாமல் ரிப்பன் வைத்து கட்டப்பட்ட தலைமுடி, எப்பவாது அபூர்வமாக இரட்டை ஜடை பின்னால் வருவாள் அட்டகாசமாக இருக்கும்  முகம் பார்பதற்கு எப்பொழுதும் பளிச்சென்றும், பொலிவு சற்றும் குறையாமல் பார்க்க வைக்கும் செம்பு நிறம், காதில் இருபக்கமும் கொஞ்சம் நீளமாக தொங்கும் வெள்ளை கலர் தொங்கட்டானோ இல்லை சில நாட்கள்  வெள்ளை கலர் சாதாரண பிளாஸ்டிக் ஜிமிக்கியோ இருக்கும். எப்பொழுதும் வெள்ளை கலர்தான் போடுவாள் , கண்கள் ஒன்னரை கண்ணாக ஈர்ப்புடனும் சதா புண்ணகைக்கவும் செய்யும் சிலருக்கு ஒன்னரை கண்கள் இருந்தால் ஒரு மாதிரியாக இருக்கும் இவளுக்கு அப்படி தெரியாது, ஸ்கூல் யூனிபார்மில் மேலே வெள்ளை சட்டையும் கீழே நடுவில் வெள்ளையும் மேல்கீழ் இருபுறமும் இளநீல நிற பாவாடையும் , அணிந்து  நடக்கும் போது (சாதாரண உடையில் ஒரே ஒரு முறை பார்த்தது) வேகமாவும் கொஞ்சம் ஒரு புறம் சாய்ந்து நடப்பாள் அதை வேறு அடிக்கடி சொல்லிக்கட்டுவான் பெருமாள்


மச்சான் அவ நடைய பாத்தியாடா வேகமா நடந்தாலும் ஒரு "கிக்" இருக்குல்ல


ஆமாடா ஒரு பக்கமா சாஞ்சி போவும் மாடு மாரி என்பான் மாணிக்கம்


வழக்கம் போல அவளை பாப்பதற்கு ஸ்கூல் விட்டவுடன் வேகமாக ஓடி வீட்டிற்கு வந்து புத்தகப


ையை வைத்து விட்டு வீட்டில் அம்மாவிடம் "எங்கடா இவ்வளவு அவசரமா போற" என்ற கேள்வியை காதில் வாங்கியபடியே தெருவின் குறுக்கே நடந்து அங்கிருந்து நேரே வேகமா மார்கெட் முனைவரை வந்து வலதுபுறம் திரும்பி இடதுபுறம் உள்ளபடியில் ஏறி பாண்டுரெட்டியார் கடையை தாண்டி  கறிவேப்பிலை வாழை இலை கடைகளை தவிர்த்து பின்னால் இருக்கிற காலையில் மட்டும் ஆட்டுகறி வெட்டும் இடத்தின் வீச்சத்தை மூக்கு ஏற்காமல் முகம் சுளித்து பின்னால் இருக்கும்படியில் இறங்கி நின்று அவள் வருவதை பார்க நிற்பது வழக்கம் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் மார்பில் புத்தகத்தை இடதுகையால் அனைத்தவண்ணம் அவள் நடந்து வருவதை பார்பான் அவள் போகும்வரை பாப்பது வழக்கம் அவளும் ஒரிரு முறை திரும்பி பாப்பாள் அவள் கண்களில் பல சமயம் ஆச்சர்யக்குறியை கண்டிருக்கிறேன் அவ்வளவு சீக்கிரம் அங்க வந்ததை எதிர்பாராததை போல இருக்கும் அது தான் அவளை மேலும் கவனிக்க தூண்டியது.

 

மச்சான் எவ்வளவு நாள்டா இப்டி அலைவ சீக்கிரம் ஒன்னோட லவ்வ சொல்லிடுடா அடுத்தது ப்ளஸ் ஒன் போப்போறம் அப்பால ஒன் இஸ்டம்  என்றான் மாணிக்கம் 


இன்னும் கொஞ்ச நாள் பொறு" ஒய்" சொல்லிடலாம் சிரிக்கிறா இருந்தாலும் கொஞ்சம் ஓதறலா இருக்குடா , சீக்கிரம் சொல்லிடுவோம்


மாணிக்கம்  என்னாது சொல்லிடுவோமா என்ன மச்சான் என்னையும் சேக்குற நீ கேளு நீதான பின்னாடிய அலையுற அவ வேற ஒன்னையே பாக்குறா இது சரிபடாதுடா சீக்கிரம் சொல்லிடு தொனைக்க்கு வேனும்னா வர்றேன் என்றான்


ஹே ஆசைய பாரு நாதாண்டா ரூட்டுவுட்டது நா சொல்லிடுறேன் நீ தொனைக்கு வந்தாபோதும். சொல்லும்போது மட்டும் தள்ளிநின்னுக்க

மச்சான் லட்டரா எழுதி குடுத்துடலாமா அது இன்னும் ஈசியா இருக்கும்ல


ஆமாடா அப்பதான் கையோட கையா ரெண்டு பேரையும் மாட்டிவுட  கஷ்டமே இருக்காது அதெல்லாம் வேண்டாடா அப்படினா நா வரல  கடைசிபரிட்சை  எழுதுன அன்னக்கி பேசிடு அதுக்கப்புறம் ஸ்கூல் லீவுவிட்டு வாங்க சரியா?


ஆமா அதுவும் சரிதான் நல்ல ஐடியா. ஆனநமக்கு பரீட்சை அன்னிக்கு அவளுக்கு ஸ்கூல் இருக்குமா தெரியலயே விசாரிக்கனும்டா


ஸ்கூலில் இதுதொடர்புடைய வாத்தியாரிடம் ஏதோ சொல்லி தகவலை வாங்கி விட்டான் 

கடைசி பரீட்சை மதியம்  ஒரு மணிக்கு முடிஞ்சதும் நாங்க வீட்டுக்கு வந்துட்டு ஸ்கூல்வுடுற நேரமா பாத்து மார்கெட் பின்னாடி போயி நின்னுப்போம் தூரத்துல அவ வர்றத பாத்ததும் பெருமாளுக்கு ஒரு மாரி படபடப்பா ஆயிட்டான் அதுகிட்ட நெருங்கியதும்

கொஞ்சம் தள்ளி பின்னாடிய போனோம் அவன நா கிள்ளி காது கிட்ட சொல்லி தைரியத்தை கொண்டு வரலாம்ன்னு பாத்தேன்

கிட்டக்க போயி சொல்லுடா பரதேசின்னு 

ஒரு வழியாகிட்டக்கபோனோம் எனக்கு ஒரே ஒதறலா இருந்திச்சி


பெருமாளு என்னாங்க ஒரு நிமிசம் நில்லுங்க ஒங்ககிட்ட பேசனும்னான்


அவ  என்னா தம்பி என்னா பேச போறீங்க ரெம்ப நாளா நானும் பாக்குறேன் இங்க வந்து நின்னுகிட்டு கொட்ட கொட்ட என்னயே பாக்குற அவன் ஒனக்கு தொனையா என்னாடா எங்கிட்ட கேக்க போற

மாணிக்கத்த  பாத்து தம்பி நீ இங்க வா ஒங்கப்பா எஞ்சினியர் தானே நானே வந்து சொல்றேன் ரெண் பேரும் எம் பின்னாடியே சுத்துறாங்கன்னு 


எனக்கு நாக்கு மேல ஒட்டி கிச்சி பேச்சே வரல பயத்துல கை காலெல்லாம் நடுக்க ஆகம்பிச்சிருச்சி பெருமாளு நெந்துட்டான் 

அவளே சொன்னா ஏண்டா பத்தாவது படிக்குற உனக்கு பிளஸ் ஒன்னு படிக்குறவ மேல காதலா ஒடுங்கடா இனிமே ஒங்கள எம் பின்னாடி பாத்தேன் அவ்வளவு தான் சொல்வேன் அப்புறம் பாத்துக்க 

பெருமாளுபஞ்சரான வண்டில ஓடுன  டையாராயிட்டான்

Saturday, 23 April 2022

மூத்த அகதி


 மூத்த அகதி  -நாவல் விமர்சனம்

எழுதியவர் - வாசு முருகவேல்




இலங்கையில் ஏற்பட்ட இன பிரச்சனையினால் இலங்கைவாழ் தமிழர்கள் தங்கள் தாய்நாடான இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தாம் வாழும் வாழ்க்கையை தொலைத்துவிட்டு பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வாழ தலைப்பட்டனர் அப்படி அகதியாக வந்தவர்களின் வாழ்வு இந்தியாவில் தமிழ் நாட்டில் சென்னையில் அவர்களின் வாழ்வை பற்றிய பதிவாகவும் தனி நபரின் துயரம் நிறைந்த வாழ்க்கையாகவும் பதிவு செய்துள்ளார்.


இந்த நாவலில் வரும் பாலன், வாசன், துவாரகன், ரூபன் , வாசனின் தந்தை மற்றும் தாய் இவர்கள் ஈழத்தமிழர்  வர்சா, ஜீவலட்சுமி  போன்றோர் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்

பாலன் என்ற ஈழத் தமிழர் லண்டனில் உள்ள ஒருவரின் சொந்த சொத்தான மூன்றடுக்கு மாடி வீட்டை வாடைக்கு எடுத்து அதை கெஸ்ட்ஹவுஸ் என்ற பெயர் கொடுத்து லண்டன், பிரான்ஸ் இன்னும் பல நாடுகளில் உள்ள ஈழத் தமிழரின் திருமணங்களை இங்கே நடத்தி வைக்கிறார் ஒரு கட்டத்தில் அந்த கெஸ்ட்ஹவுஸ் பல்வேறு நெருக்டிகளால்  நடத்த முடியாமல் முடங்கி போகிறது பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகின்றனர் , அவரே பல பேருக்கு மாமனாராகவும் அப்பாவாகவும் இருந்து திருமணங்களை முடித்து வைக்கிறார் அவருக்குத்துணையாக வாசன், தூவாரகன் ,ரூபன் போன்றோர் அந்த அடுக்குமாடி வீட்டை பராமரிக்கவும் திருமணம் நடந்தால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளை கவனிப்பதிலும் உதவி செய்கின்றனர். அந்த ஏற்பாடுகளுக்கும், தங்களின் சொந்த பந்தங்களை பார்கவரும், திருமணம் செய்துகொள்ள வரும் அகதிகள் கொடுக்கும் பணமே அவர்களுக்கு பொருளாதாரம் பாலன் ஒரு மகேந்திரா பொலிரோ வைத்திருக்கிறார்


வாசனின் தந்தையும் தாயும் ஒன்றாகவே அகதியா வந்தவர்கள் வசதியான வீட்டில் வாழ்ந்தவர்கள் வாசனின் தந்தையாருக்கு உடல் நலம் இல்லாமல் படுத்தபடுக்கையாக இருக்கிறார் அவர் தன் வேதனையை அதிகம் வெளிப்படுத்தாத தன்னால் தொல்லை இல்லாத வண்ணம் இருக்க வேண்டும் என நினைப்பவர் 

தன் வலியை வேதனையை தனக்ககுள்ளேயே வைத்துக்கொள்கிறார். தாயார் தன் மகன் கணவன் இருவரையும் ஒருவாரு பார்த்துக்கொள்கிறார்

கணவரின் உடல்நிலை பாதிப்பால் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை என்பதால் பை ஒன்று இணைத்து அதன் மூலம் தினமும் காலையில் பையிலிருந்து சிறுநீரை ஒரு பாட்டிலில் ஊற்றி வெளியே கொண்டுபோய் ஊற்றிவிடுவார்கள் தாயாரும் வாசனும் சற்று சிரமத்துடனும் மூக்கில் துணியை வைத்துக்கொண்டு தான் அவ்வேலையை செய்வர்

தந்தையின் உடல்நிலை பாதிப்பால் வீடு வாடைக்கு கொடுப்போரும் அடிக்கடி காலி செய்யும்படியும் இங்கே இறந்துவிட்டால் வேறு யாரும் அவ்வீட்டிற்கு வாடகைக்கு வரமாட்டர்கள் எனவும் தொல்லை கொடுப்பார்கள் ,வீட்டு மாறும் போது ஒவ்வாரு தடவையும் ஏரியா போலீஸ் ஸ்டேசனில் வீட்டு உரிமையாளரின் கையைப்பத்துடன் கடிதம் தர வேண்டும் அக்கடிதத்தையும் வீட்டின் உரிமையாளர் எழுதமாட்டார் வாசன் தான் எழுதவேண்டும் அகதியின் வாழ்வில் இது எழுதப்பட்ட சட்டம் அகதிக்கு வீடு கிடைப்பதே சற்று சிரமம்தான்.

வர்சா எதிர் வீட்டு பள்ளிக்கு செல்லும் பெண் அவளுக்கும் துவாரகனுக்கும் இடையே நடப்பது என்ன என்பதும் சற்று குழப்பத்துடன் பதிவாகி உள்ளதாக நினைக்க வைக்கிறது

ஜீவலட்சுமிக்கும் வாசனுக்கும் கடைசியாக யாரும் இல்லாத பள்ளிக்கு அருகே ஒரு வீட்டில் உறவு தொடங்கி முடிந்து விடுகிறது.

 வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகளுக்கு பெரும்பாலும் அதிக வயதில் திருமணம் நடப்பதாக நாவலில் சொல்லப்படுகிறது மாப்பிள்ளைகள் தலையில் பெரும்பாலும் முடியிருப்பதில்லை

தேடப்படும் இயக்க நபராக ரூபன் வாசனுக்கும் பாலனுக்கும் பல வகைகளில் உதவி செய்கிறார் . பெரும்பாலான நேரங்களில் ஏதாவது காரணத்துக்காக நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும்  மது அடுத்தியபடியேஇருக்கிறனர்


நாவலில் அழகியலாக இரண்டு முக்கியமான பதிவுகள் உள்ளன

1.வாசன் தன் தந்தைக்கு செய்யும் பணிவிடை, இறந்த பின் அன்றை தினத்தில் மழையோடு அவரை தகனம் செய்யும் நேரங்கள்


2.எம்ஜியார்நகர் அதன் சுற்றுபுறங்கள் சென்னையில் ஈழத்தமிழருக்கான உணவு வகைகள் அவர்கள் விரும்பி செல்லும் உணவகங்களை பற்றிய பதிவுகளும் சிறந்த அழகியல்


நாவலின் தலைப்பிற்கும் நாவலுக்கும் சம்பந்தம் என்ன என்பதும் கேள்விக்குறியாக (எனக்கு ) உள்ளது அது பாலனா, வாசனின் தாயா? தந்தையா? பொதுவாக நாவலில் வரும் அனைவருமா ?


எல் டி டி ஈ , ஈஆர் எல் எப் போன்ற இயக்கத்தினரின் இயக்க செயல்பாட்டில் உள்ள சாதக பாதகங்களையும் வாழ்வியலின்  பல கசப்பான அனுபவங்களையும் , அகதிகளின் வாழ்வை பற்றிய ஒரு அவசியமான பதிவு இந்நாவல் 


கட்டுரையாளர்

வீ.கலியபெருமாள்

Saturday, 9 April 2022

காலம் பூரா தண்டனை



ஆஸ்பிடலின் இடதுபுறம் நுழைந்து இடது புறமே உள்ள பிளட்டெஸ்ட் லேபுக்கு பக்கத்தில் இருக்கும் அந்த இடைவெளியில் பைக்கை நிறுத்திவிட்டு லாக்செய்து டூல்ஸ் பையை எடுத்துத் கொண்டு பெரியவாசப்படி வழியாக போய் வலதுபுறம் உள்ள ரிஷப்சனில் இருக்கும் ரூபனிடம் 


ரூபன் என்ன ஆச்சி ஏதாவது ஃபால்ட்டா போன் பண்ணிங்க


ஒன்னுமில்ல 106 ல டியூப்லைட் எரியல லேபர் வார்டுலயும் டியூப்லைட் எரியல அதான் போன் பண்ணேன் 


சரி கூப்டும்போதே சொல்லியிருந்தா டியூப் லைட்ட வாங்கிட்டேவந்திருப்பேனே ரெண்டு வாட்டி அலையனும், மொதல்லயே சொல்லகூடாதா ருபன்


அது இல்ல கோயிந்து மேனேஜர் இன்னும் வரல போன் பண்ணேன் எடுக்கல அதான் முன்னாடியே வாங்க சொல்லல   ,அப்புறம் என்ன கேக்காம ஏன் இத பண்ணீங்கன்னு கேள்வி வரும் அதனால தான் சொல்லல


அப்போது ரிஷப்சன் அருகே வந்த ஒரு பையன் சார் எனக்கு தம்பி பொறந்திருக்கான் சாக்லேட் எடுத்துக்குங்க 


நன்றி தம்பி வாழ்க வளமுடன் ரெண்டு சாக்லேட் எடுத்துக்கலாமா எனக்கு ரெண்டு  புள்ளங்க ஒகே வா


ஒகே சார் உங்களுக்கு எத்தன வேணுமோ அத்தனை எடுத்துக்குங்க


மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த போது சாக்லெட்டை பொண்டாட்டிகிட்ட குடுத்துவிட்டு ஆஸ்பிடலில் பையன் பொறந்ததை சொல்லி சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போய்ட்டேன்  ,ஆனாலும் அன்று முழுவதும் ஏதோ ஒரு உறுத்தல் மனதை சரியாக வைத்து வேலை செய்ய முடியாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது. நடுஇரவில் தீடீர் விழிப்பு ஏற்பட்டு எழுந்து ஒக்காந்தேன் பழைய ஞாபகம் ஒன்று ,தலையிலேர்ந்து தொப்புள் வரைக்கும் ஏதோ இனம்புரியாத ஏதோ ஒரு உணர்வு , இரவுத் தனிமை எதையா இழந்ததை போல ஒரு படபடப்பு , யாரோ அறையின் முலையில் இருந்தபடி உற்று பார்பது போல ஒரு உறுத்தல் யாரும் இல்லை  ,ஞாபகம் பதினாரு வருடத்திற்கு முன்பு நடந்ததை கண்முன்னே காட்சியாக தோன்றி மனதையும் வயிற்றையும் பிசைய ஆம்பித்தது தூக்கம் கெட்டதுமில்லாமல் ஞாபக அடுக்குகளிருந்து நடந்தவைகளை படக்காட்சியாக மனம் காட்டிக்கொண்டிருந்தது


முதல் குழந்தை பிறந்த உடனேயே துணைவியாருடன் கலந்து முடிவு செய்தேன் நான் பாக்கும் வேலைக்கும் கிடைக்கும் வருமானத்திற்கும்  ஒரு குழந்தை போதும் அதை நல்லபடியாக வளத்துபடிக்க வைத்துவிட்டாலே கோடி புண்ணியம்னு   


முதல் குழந்தை பெண்ணாக பிறந்தது நல்லதுன்னு நெனச்சன்

இரண்டு வருசம் போய்டுச்சி அப்பாவும் அம்மாவும் ஓயாம தொல்ல இரண்டாவது புள்ளய பெத்துக்கங்கன்னு

நானும் முடியாதுன்னு சொல்லி சமாளிச்சிகிட்டே இருந்தேன் , எம்பொண்டாட்டி நைசா எங்கிட்ட கொழந்தை பெத்துகுறத பத்தி பேச்செடுத்தா 

அப்படியும் இப்டியும் எப்டியும் யோசிக்கலாம் மனுச மனசு அலைபாயாம இருக்குமா இல்ல கட்டிபோட தான் முடியுமா இரண்டு தடவ அபார்சன் ஆயிடிச்சி மனைவியோட உடல் நெலய கணக்கு பண்ணிட்டு நான் இரண்டாவது குழந்தை வேண்டாமுன்னு முடிவோட இருந்தேன்


என்னாங்க நாம ஏன் ரொண்டாவதா  ஒரு புள்ளய பெத்துக்க கூடாது ஒன்னே ஒன்னு இருந்தா சரியா வராது  அதனால ரெண்டாவதா பையனோ பொண்னோ  பெறக்கட்டும் சமாளிச்சிக்கலாம் என்னா சொல்றீங்க 


சரிதான் எப்படி சமாளிக்குறது வருமானம் பத்தாதே நானும் என்ன செய்யுறது வேற ஏதாவது தொழில் செஞ்சிதான் பாக்கனும்


இத பாருங்க இப்ப உட்டா அப்றம். சரியான நேரம் அமையுன்னு சொல்லமுடியாது பின்னாடி வருத்தப்படகூடாது  என்னையும் குத்தம் சொல்லாதீங்க 


ம் .எனக்கு கொஞ்சம் டைம் குடு யோசிக்கிறேன் அப்பாவும் அம்மாவும் தம்பியும் கூட என்ன சொல்றாங்கன்னு  பாப்போம்


கிட்டதட்ட ஒரு மாதம் குழந்தை வேண்டியதை பற்றி நன்றாகவே பல கோணங்களில் யோசித்து பார்த்தும் ஒரு சரியான முடிவுக்கு வர முடியல சரி ஆனது ஆகட்டும்னு பெருமாள் மேல பாரத்த ஏத்திவிடுவோம்னு ஏத்திவிட்டாச்சி

நாளும் கிழமையும் பார்த்து பார்த்து  நானும் அவளும் குழந்தைக்காக தவமா சேர ஆரம்பிச்சி கருவும் உண்டாயிடிச்சி


என்னாங்க ஒரு வாரம் தள்ளி போயிருக்கு  உண்டாயிருப்போமோன்னு தோனுது செக்கப்பண்ணி பாத்துடவா


ஒகே செக்கப்பண்ணி பாத்துடலாம் அந்த ஸ்டிப்ப வாங்கிட்டு வரவா  இல்ல வழக்கமா பாக்குற டாக்டர பாக்குறியா  


ஸ்டிப்ப வாங்கிட்டு வாங்க பாத்துட்டு  அப்புறமா போயிக்கலாம்


ஸ்டிப்ப வாங்கி அதவைச்சி  மாசமா ஆனத உறுதிபடுத்தியாச்சி

குழந்தை உண்டானதை அப்பா அம்மாவிடமும் தெரியப்படுத்தி ஆசிர்வாதமும் வாங்கியச்சி

பொண்டாட்டி ரெம்ப ஜாலியா இருந்தா நானும் புள்ள எப்ப வரும்னு காத்திருந்தேன் 

 அஞ்சாவது மாசம்னு நெனக்கிறேன் காலையில குளிக்குறதுக்கு முன்னாடி பனியன கழட்டிட்டு திரும்பும் போது முதுவ பாத்தவ 

என்னாங்க நல்லா முதுவ காட்டுங்க என்ன ரெம்ப அழுக்கா இருக்கே நல்லா முதுகு தேய்ச்சி குளிக்க மாட்டிங்களா சோப்பு போடும்போது கூப்டுங்க வந்து நல்லா தேச்சிவிடுறேன்


சரி சொல்றேன் வந்து தேச்சிவுடு


சோப்பு போடும் போது கூப்டேன் வந்து சோப்பும் கையுமா நல்லா முதுகு தேய்ச்சிவிட்டா 


பாத்து தேச்சிவிடு வேற எங்காவது தேக்க போற


ஆமா ஒங்களுக்கு வேற வேல இல்லன்னு ரெம்ப வெக்கத்தோட சிரிச்சமாரி மூடோட பாத்தா

என்னாச்சின்னு தெரியல ரெண்டுபேரும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்து போய் ஒன்னு சேந்துட்டோம் பாத்துருமுலேயே, குளிச்சிட்டு வெளிய வந்தப்ப ஒன்னும் சொல்லல 


மறுநா காலையில அவ மூஞ்சே சரியில்ல ஒரு மாதிரி இருந்தா மெகம் சோர்ந்த மரிபோ இருந்திச்சி

நேத்து நம்ம ஒன்னு சேந்தப்ப லேசா வலி வந்திச்சிங்க இப்ப கொஞ்சம் ரத்தமா போவுது எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல டாக்டர பாப்போமா


என்னா சொல்ற அதன் அப்பவே கேட்டேன் ஒன்னு சேரலாமான்னு இப்படி ஆயிடிச்சே குழந்தைக்கு ஒன்னும் ஆவாதே 


அதெல்லாம் ஒன்னும் ஆயிருக்காதுங்க பயப்படாதீங்க நாம வேணுமின்னா செஞ்சோம் 


சாயங்காலத்துகுள்ள ரத்த போக்கு அதிகமாயிடிச்சின்னு போன் பண்ணா


டாக்டர போய் பாத்தோம் செக்கப் செஞ்சி பாத்துட்டு  ஸ்கேன் பண்ணி பாக்கனும்ன்னு சொல்லி அந்த ரிப்போட்ட பாத்துட்டு குழந்தை அசைவே இல்ல செத்து போச்சின்னு சொன்னாங்க இத ஊசி போட்டுதான் நார்மலுக்கு கொண்டு வர பாக்கனும்னு சொல்லி அட்மிசன் போட்டு ஊசியும் போட்டு குழந்தைய வெளியே எடுத்தாங்க 


எங்கையில குடுத்தாங்க பாத்தா அஞ்சி மாச பையன் எங்கையில செத்து போய்

Friday, 8 April 2022

ஒங்களுக்கு புரியுதா ?- சிறுகதை


 நடு ராத்திரி வந்த போன் அழைப்பில் தூக்கம் கலைந்து எழுந்த மாதவன் டிஸ்பிளேயில் யார் என்று பார்த்த போது அருணா என்று காண்பித்தது இப்பொழுது இவள் ஏன் போன் செய்கிறாள் என்னவாக இருக்கும் ஒரு வேளை பிரசவ வலி வந்து விட்டதா ? நாட்கள் கூட நெருங்கி விட்டதே

தூக்கம் கலைந்தது எழுந்து போய் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு தலையனையை ஒன்றின் மேல் ஒன்றை குறுக்காக கட்டிலின் தடுப்பில் வைத்து சாய்ந்தபடி போனை எடுத்து பார்த்தான்


அருணா அறிமுகமானதே ஒரு விபத்துதான் நாட்டுகறுப்பாக கொஞ்சம் பூசினாற் போல உடம்பும் உயரமாயும் சிரிக்கும் போது யாரையும் கவரும் முகமும் சரிக்கு சரியாக பேசுவதிலும் கெட்டிக்காரி எனக்கும் அவளுக்கும் எப்படியும் இருபது வயது இடைவெளியாவது இருக்கும் எனது கடையை அடுத்த மொபைல் கடையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடமிருக்கும் பொதுவாக நான் அவ்வளவாக பெண்களிடம் பேசக்கூடியவனல்லன் 

ஒரு வருடத்திற்கு முன்பு மொபைல் கடை ஒனர் செந்தில் இல்லாத போது கஸ்டமர் ஏதோ கேட்க சரியாக காதில் வாங்காமல் அதற்கு சொன்ன பதிலால் கடுப்பான கஸ்டமர் பச்சை பச்சையாக திட்ட ஆரம்பித்தான் அவளும் சரிக்கு சரியாக திட்ட ஆரம்பிக்க கஸ்டமர் அவளை அறைந்து விட்டார்

இதை எதிர்பாராத அருணா தடுமாறி கடையையொட்டி உட்காந்து மோட்டர் வைண்டிங் செய்து கொன்டிருந்த என் மீது விழுந்துவிட்டாள் நானும் தடுமாறி கடை வாசலில் விழுந்துவிட என் மேல் மோட்டர்விழுந்து ரத்த காயமானது ரத்தம் ஒழுக மொபைல் கடை கஸ்டமரை நான் அடிக்க அங்க ஒரு சின்ன கைகலப்பு ஏற்பட அக்கம் பக்கம் கடையில் உள்ளவர்கள் வந்து என்னையும் அந்த ஆளையும் பிரித்து விட்டு அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு எனக்கு உண்டான காயத்திற்கு மருந்திட்டு ஆசுவாசபடுத்தினர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அருணா கொஞ்ச நேரம் கழித்து என் கடைக்கு வந்து என் காயத்தை பார்த்து விசாரிக்க ஆரம்பித்தாள்

சந்து சந்தாக பர்மா பஜார் கடைகள் போல உள்ளகடைகளை இரண்டு  கடைகளின் இரு பக்க குறுக்கு சுவர்களை எடுத்து விட்டு ஒரே கடையாக செய்தது எனது கடை கொஞ்சம் நீளம் அதிகமாகவும் பெரிதாகவும் இருக்கும் கடை முழுக்க மோட்டார்களும் ,பேன் , மிக்ஸி , கிரைன்டர் போன்ற பல தரப்பட்ட எலக்ட்டிரிக் சாமான்கள் பிரித்து போட்டு உள்ளே ஒக்கார முடியாத அளவுக்கு இருக்கும் அதனால் வாசலில் ஒக்காந்து மோட்டர்வைண்டிங் ரிப்பேர் வேலைகள் செய்வேன் 


அருணா வந்து அய்யய்யோ

இப்படி ரத்த காயம் உண்டாயிடிச்சே அடி ரெம்ப பலமா என்று கொஞ்சம் அழுகையோடு விசாரிக்க ஆரம்பித்தாள்


இல்லம்மா ரெம்ப அடியல்லாம் இல்ல எனக்கு சூட்டு ஒடம்பு சீக்கிரம் ஆறிடும் கவலபடாதே  சரி கடையில் போயி ஒக்காரு செந்தில் வந்து திட்ட போறாப்புல 


இப்படி ஏற்பட்ட விபத்தால் கொஞ்சம் கெஞ்சமாக நெருக்கம் அதிகமாகி போன் நம்பர் வாங்கிபேசி சிரிக்கவும் வாட்சாப்பில் சேட் செய்யவும் ஆரம்பித்தேன்

அருணாவுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு சொல்லியிருக்கிறாள் போனில் போட்டோவும் காட்டியிருக்கிறாள்

புருசன் சரியான குடிகாரன் வேலைக்கு போவதே அபூர்வம்  தினமும்  குடித்து விட்டு அடி, உதை வேறு கூடவே உடலின்பத்துக்கு அழைத்து ஏறக்குறைய வன்புணர்வுக்கு உட்படுத்தி போதையினால் நீண்ட நேரம் இயக்கத்தில் ஈடுபட்டு ரணமயமாகி எப்பொழுதும் கவலைப்பட்ட முகமாகவே இருப்பாள் அதையும் அடிக்கடி என்னிடம் அழுதபடியே சொல்வாள்


அதனாலேயே அடிக்கடி புருசனிடம் சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு போய் விடுவாள்

அவனும் வாரம் பத்து நாள் கழித்து மாமியார் வீட்டுக்கு போய் கெஞ்சி கூத்தாடி அழுதுகால்லவிழுந்து கூட்டிக்கிட்டு போவான்

எனக்கு கல்யாணமாகி இரண்டு பையன்களும் அவர்களுக்கு கல்யாணமாயி பேரப்பிள்ளைகள் உண்டு , ஆனாலும் எனக்கும் அப்பப்ப பெண் துணை தேவைப்படும் நானும் மனுசன் தானே ,ஆனா வீட்டுல மனைவி உடல் நலக் கோளாரினால் ஒத்துழைப்பது இல்லை நானும் வற்புறுத்துவதும் இல்லை


ஒரு வழியா தட்டு தடுமாறி கொஞ்ச கொஞ்சமா பேசி என்னோட நிலமைய விளக்கி உனக்கு விருப்பமிருந்தா எனக்கு நீ வேணுமின்னு கேட்டும்புட்டேன்

அருணா மொதல்ல பேசி பாப்போங்க அப்புறம் போகப் போக பாப்போம்ன்னா

 

சரி அப்படியே செய்வோம்ன்னு  சொல்லி கொஞ்ச நாள் பேசிக்கிட்டிருந்தோம் 

பிறகு முத்தத்தில் ஆரம்பித்தது ஒரு வருடம் கழித்து என்னவோ தெரியல ஒத்துகிட்டு கூட ஆரம்பித்தோம்

 

கடைக்கு பின்புறமிருந்த காலியான குடோனை வாடகை்கு பிடித்தேன் குடோன் ஒதுக்குபுறமாவும் ரெம்ப வெளியே தெரியாதபடி கடைகள் மறச்சிருக்கும் பத்துக்கு பத்தடி நல்ல சதுரமான அமைப்போட அட்டாச்சிடு பாத்ரும் வசதியா இருக்கும்  சந்து வழியா வந்தா அவ்வளவா யாருக்கும் தெரியாது வரலாம் போலாம்

ஞாயிறு மதியத்திற்கு மேல் சாய்ந்தரம்  ஆறு மணி வரைக்கும்  சந்துல குடியிருக்குற யாரும் அதிகமா வெளிய வர மாட்டாங்க ஆள் நடமாட்டம் கூட இருக்காது மொத்தத்துல ஒரு ஈ காக்கா கூட இருக்காது

  

இரண்டு மணிக்குள் சாப்பிட்டு விட்டு பின்புறம் குடோன்ல ரெண்டு பேரும் பேசிகிட்டும் உறவில் ஈடுபட்டும் வந்தோம் மொதல்முறையா கூடி முடிச்சதும் நா கேட்டது


இப்படி இருக்கோமே குழந்தை பொறந்துட போவுதுடி 


அதெல்லாம் பொறக்காது கவலபடாதீங்க காப்பர் டி போட்டுருக்கேன் இல்லேன்னா எம் புருசனால இந்நேரம் ரெண்டு பொறந்திருக்கும்னு  சிரிப்பா


சரி  புருசனுக்கு தெரிஞ்சா என்னாகும்


அதெல்லாம் தெரியாது அவன் இங்கேயெல்லாம் வர மாட்டான்

குடிச்சிட்டு எவவூட்டுலயாவது கடப்பான்


உனக்கு எங்கூட இருக்குறது தப்பா தெரியலயா ?


இதுல என்ன தப்புருக்கு , உங்களுக்கு நாதேவ எனக்கு நல்லா பாத்துக்குற ஆம்பள வேணும் அதுலேயும் மனச கொல்லலாம பாத்துக்குற ஆம்பள வேணுங்க அது நீங்கதான்


இப்ப நா திடீர்னு வேணாமுன்னு ஒதுங்கிட்டா என்னா பண்ணுவே 


சரி நமக்கு கெடச்சது அவ்வளவுதான்னு ஒதுங்கிப் போய்டுவேன் , நாம முன்னாடியே பேசின படி நடந்துக்குவேன் வேற யாரையும் இனி சேத்துக்கவே மாட்டேங்க நா அந்தமாரி ஊர் மேயுறவ கெடையாது ஒங்களுக்கும் அது தெரியும் மூனு வருசமா பாக்குறீங்கல்ல


சரிடி ஒன்னு கேக்கனும் வாடி போடின்னு கூப்புர்றேனே ஒனக்கு ஒகேவா


எனக்கு புடிக்குங்க அதும் நீங்க கூப்டா ஒகே  


உனக்கு புள்ளவேணும்ன்னு ஆச இருக்கா இல்லையா  எனக்கு ரெண்டும் பையன் அதனால எனக்கு பொண்னு வேணும்  பெத்து குடுக்கிறியாடி 


இப்ப அதெல்லாம் முடியாதுங்க கொஞ்ச நாளாவுட்டும் அத்தோட பணங்காசு வேணும் புள்ள பொறந்தா ஒரு வருசமாவது வேலைக்கு வர முடியாது பாப்போங்க 


இப்படியே போன நாட்கள் இரண்டு வருசமா எங்க தொடர்பு நீடித்தது 

வாரம் ஒருமுறை இருந்தது மாதம் இருமுறை அல்லது ஒரு முறையானது அப்படியும் ரெண்டு பேரிடமும் நாட்டம் குறையவில்லை

வாட்சாப்பில் மெசேஜ் போடுவதும் சேட் செய்வதும் குறைந்தது 

புருசன் குடிபோதையில் மொபைலை ஒடைத்ததினாலும் சண்டையாலும் இரண்டு மாதம் வேலைக்கு வரவில்லை 

வந்தவளை பார்த்து அதிர்ந்தேன் அதிகம் கவலையினாலும் சோர்ந்தும் புருசன் கண்மூடித்தனமாக அடித்ததில் கையில் ஆழமான காயமும் கன்னத்தில் லேசான வீக்கமும் இன்னமும் இருந்தது கண்கள் ஒளியிழந்து ஆழத்தில் வறட்சியாக இருந்தது , உதடுகள் வெடித்து நாகப்பழகலருக்கு மாறியிருந்தது அவளுடன் பழகிய காலத்தில் அது தான் மிக அதிகமான காயமாக இருந்தது


என்னாடி ஆச்சி  ஆள காணும் போனும் பண்ணல அப்டியென்ன பிரச்சன சொலியுடவேண்டியது தானே  சே என்னா ஒரு சுயநலம்


உங்களுக்கும் தெரிய வேணாம்ன்னு தான் சொல்லல வரல 

மறுபடி சண்டையாயி போலீஸ் வரைக்கும் போயிடிச்சிங்க என்னா செய்றது பாடா படுத்திவச்சான் அவங்க அம்மா வந்து காப்பாத்தி அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க இப்ப திருந்திட்டேன் குடிக்க மாட்டன்னு வந்து அழுதுகால்ல உளுந்து கூப்டான்னு வந்துட்டேன்


ஒகே டி வேலைய பாரு அப்புறமா பேசுவோம்


வேற மொபைல் வாங்கி தாங்க பெறவு பணம் தர்றேன்


சரி டி போவும் போது வாங்கி தாரேன்


பழைய போன் ஒன்னு வாங்கித் தந்தேன்'


பத்து பதினைந்து நாள் இருக்கும் பழையபடி புருசன் குடித்துவிட்டு அடிச்சிட்டான்னு அம்மா வீட்டுக் போய்ட்டா , அங்கிருந்து போன் பண்ணி சொன்னா 

நா அம்மா வீட்டுலர்ந்தே வேலைக் நாளையிலிருந்து வருவேன் அப்போ பேசலாம் மாமா


என்னாடி புதுசா மாமான்னு கூப்புடுற சரிவா நேர்ல பேசுவோம்


ஒகேங்க கட் பண்ணிடுறேன்


நேர்ல பேசும் போது அழ ஆம்பித்தாள் என்னால முடியலங்க ரெம்ப ஓவரா பண்றான் ஒரு வாரம் சும்மா இருந்தான் அப்புறம் பழையபடி தண்ணிய போட்டுட்டு தெனம் செய்யுறான் அதும் ரெம்ப நேரம் செய்யுறான் தாங்க முடியெல அன்னக்கி தண்ணிய போட்டுட்டு செய்யுற தோட அடிக்கவும் செஞ்சான் அதான் போலீசுக் சொல்லிட்டு அம்மா விட்டுக்கு போய்ட்டேன் பாப்போம் நாளைக்கு ஸ்டேசன்ல கூப்ட்டு கேப்பாங்க அப்ப முடியாது வெட்டி வுடுங்கன்னு சொல்ல போறேன்


சரிடி பாத்துக்க வாழ்க்க உன்னுது அத நல்லபடியா வசிக்க


சரிங்க இனிமே நா உங்கள மாமான்னு தான் கூப்டுவேன் ஒகே வா மாமா

சரிடி ஒம் விருப்பம்


இம்மாதிரியான சிக்கலான வாழ்க்கை போயிகிட்டிருந்திச்சி ரெண்டு மாசம் எங்கூடவே இருந்தா புருசன் வீட்டுக்கு போவாம அம்மா வீட்டுலர்ந்து வேலைக்கு வந்தால எனக்கும் அது சவுரியமா இருந்திச்சி ரெண்டு மாசம் கழிச்சி அவ புருசன் வந்து திரும்பவும் கூப்டவும் முடியாதுன்னு சொல்லியும் கேக்காம போலீசுக்கு போய் கேட்டு அவங்க இவள கூப்டு இப்போ போய் வாழு திரும்பவும் ஏதாவது பிரச்சன பண்ணா வந்து சொல்லுன்னும் அவர் தராம உனக்கு டைவர்ஸ் கெடக்காது அதனால பேசாம சேந்து வாழுங்கன்னு சொன்னதால திரும்பவும் புருசன் வீட்டுக்கு போய்ட்டா

வழக்கம் போல வேலைக்கு வர்றதும் எங்கூட பேசுறதும் ஒன்னா இருக்குறதுமா பொழுது போச்சு


திடீர்னு ஒருநா என்னாங்க மாமா நா இன்னொரு புள்ள பெத்துக்கலாம்னு இருக்கேன் , நீங்க கேட்டீங்களே பொம்பள புள்ளவேனுமின்னு பெத்துக்கலாமா

கொஞ்சம் அதிர்ச்சியோட நல்லா யோசிச்சிதாம் சொல்றியா , இப்ப இருக்குற இருப்புல இது முடியுமா? பணங்காசு இருக்காடி , ஒரு புள்ளாக்கே ஸ்கூல் பீசு கட்டமுடியலன்னு சொன்ன ,புருசன் காசு தர்றதில்லைன்னு சொல்ற ஏதோ என்னால முடிஞ்சத தந்து கிட்டிருக்கேன் பைனான்ஸ் வேற வாங்கி வச்சிருக்க நல்லா யோசிச்சியா

நல்லா யோசிச்சிட்டேன் மாமா ஒரு புள்ளக்கி இன்னான்னு தொனையா இருக்கும் நானும் எங்கக்காவும் போல பின்னாடி நல்லாருக்கட்டும்


சரிடி என்னமோ சொல்ற ஒரு கேள்வி உண்மையாவே எனக்கு பெத்து தரப்போறியா , முடிவே பண்ட்டியா 


ஆமா மாமா இந்த மாசம் குளிச்சதும் காப்பர் டிய எடுத்துடுவேன் அப்புறம் ஒங்க கூட இருந்துதான் பெத்துக்க போறேன்


சொன்னமாரி காப்பர் டிய எடுத்துட்டேன்னு சொன்னா இரண்டு வாரம் ஒன்னா இருந்தோம் 


அந்த மாசம்  ஒருநாள் வாட் சாப்பில் மெசேஜ் பண்ணா


மாமா பிஸியா


இல்ல சொல்லுடி


எப்டி சொல்றதுன்னு தெரியல தப்பா நெனக்க மாட்டிங்களே


இல்லடி சொல்லு ரொம்ப பீடிக போடுற என்னா சேதி


ஒங்க கிட்ட தான் மொதல்ல சொல்றேன் சொல்லவா ?


சொல்லுடி செல்லம்


நா மாசமா இருக்கேன் மாமா சாயங்காலமா பேசுறேன் இல்லேன்ன வழக்கமா ஞாயித்துகெழம வரும் போது பேசுவோம் 


சரிடி அப்டியா சந்தோசம் எனக்கு தானே


பதிலு வரல கடையில பாக்கும் போது அதிகமா பேச முடியல ஞாயித்து கெழம ஒன்னு சேந்த பின்னாடி பேசுனோம்


என்னாடி உண்மையாவா சொல்ற மாசமா இருக்கியா


ஆமா மாமா மெசேஜ் பண்ணத்துக்கு மொதநாளு ஒடம்பு சரியில்ல டாக்டர போயி பாக்கும் போது சந்தேகம் வந்து செக் பண்ணேன் அப்போதான் தெரிஞ்சது


உறுதியா தெரியுமாடி எத்தனை நாளாவுது  


தெரியும் கன்பார்ம் பண்ணியாச்சி ஒரு மாசம் ஆவுது


ம் எனக்குத் தானே 


அது சரியா தெரியல மாமா ஒங்ககூட இருந்தப்பறம்  அவன் கூடவும் இருந்தேன் சரியா தெரியல


  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...