சீண்டப்படாத கலையின் புலம்பல்
ஒராயிரமாண்டின் நிதர்சன சாட்சி
கலவையான மரபுத் தொடர்ச்சியின்
எச்சங்களின் ஆணவக் கூச்சல்கள்
அதனெதிரே நிற்கக் அருகதையற்றவர்கள்
தற்பெருமைக்கும் கலையின் பரிணாமங்களின் தன்னெழுச்சியில் வெளியுமிழ்ந்த
தரிசனங்களில் ஒன்று
பொருளியல் தேவையின் அழுத்தத்தில்
உணர்வின்றி தன்னிச்சையாய்
வாகன ஒட்டத்தில் கன்னத்தில் ஒற்றிக் கொள்ளும் பங்களிப்பில்லா சமுதாயத்தின் பிரதிநிதி
வார இறுதி நாட்களில் கட்டுப்படுத்தவியலா அதீத மக்கள் வரத்தினால் சீண்டப்படாத
கலை நுணுக்கங்கள் சலிப்புற
தற்படங்களின் ஒவ்வாரு கணத்திற்கும்
பெருமூச்சு விட்டபடி கம்பீரமாக நிற்கும்
பெருமைக்கும் சிறுமைக்கும் பதிலளிக்காமல் காலத்தின் கோலத்திற்கு முன்னுதாரனமாய்
தன்னடக்கத்துடன் அமர்ந்திருக்கும்
பெரிய கோயில்
கலித்தேவன்.
