Wednesday, 16 November 2022

எப்படி?

 

எப்படி?





மிக மிக நீண்ட நாட்களுக்கு

பிறகு, உன் குரலை கேட்டதும்

கம்பால் குத்தப்பட்ட 

தேனடையிலிருந்து ஒழுகும்

தேனைப்போல 

ஞாபக அலமாரியில்

நீண்ட  வரலாறாய்

பதிந்த நினைவுகள்

அமைதியான அகன்ற சாலையில்

உருவான பள்ளத்தில் தேங்கிய

நீரை

இருசக்கர வாகன ஒட்டத்தால்

இருபுறமும் சிதறடிக்க

ஆழ்ந்த உறக்கத்தில்

கெட்டகனா கண்டு

திடுக்கிட்டு விழித்து ஊடே 

பதறும் மனதை..........

எப்படி வழிநடத்துவது



கலியபெருமாள்

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...