Sunday, 31 July 2022

சிதைவுகள் -நாவல் விமர்சனம்

 சிதைவுகள் -நாவல் 

சிதைவுகள் நாவலின் மையச்சரடு ஆப்ரிக்க பழங்குடியினத்தின் பண்பாடும் நாகரீகமும் வளர்ச்சியும் ஒரு கட்டத்தில் அன்னியர் வருகையினாலும் அவர்களின் மொழியை நாகரீகத்தை மதத்தை புகுத்தியதால் சிதைவுறுகிறது என்பதையே இந்நாவல் சுட்டுகிறது

 

மனிதன் தான் வளர்ந்த காலத்தை திரும்பி பார்த்தால் அவன் செய்த செயல்களின் தன்மைக்குகேற்ப நன்மையாகவோ தீமையாகவோ முடிவுகள் இருக்கும். ஒரு மனிதனின் நம்பிக்கை மற்றொரு மனிதனிடமிருந்து நிச்சயமாக மாறுபட்டு இருக்கும். சாதாரண விஷயமே இப்படியென்றால் மத, ஜாதி இன அடிப்படைகளில் வெகுவாகவே மாற்றம் இருக்க வேண்டும் அதுவே நியதியும் கூட.

நாடு பிடிக்கும் ஆசையிலோ , அங்கே நிலவிய பொருளாதார சிக்கலிலோ வெளிய வந்த வெள்ளையர்கள் என அழைக்கப்படும் பிரிட்டீஷாரின் போக்குகள் ஒருசிலரை தவிர மற்றவர்களுக்கு ஒரே மாதிரிதான் ராணியாரின் ஆட்சியின் கீழ் இருப்பதாக பறைசாற்றிக்கொண்டு அவர்கள் பிடித்த நாடுகளில் தீவுகளில் அவர்களின் நம்பிக்கைக்கும் மத பிரச்சாரத்திற்கும் தகுந்தாற்போல சட்ட திட்டங்களை கொண்டுவந்து விட்டு அதைத்தான் அனைவரும் தொடர வேண்டும் என நிர்பந்தப்படுத்துவது, நாட்டையே சுரண்டுவது , வரி என்ற பெயரிலும் பொருள் சேர்ப்பது, அப்படிப்பட்ட நிலையைத்தான் சிதைவுகள் நாவலில் ஆவணப்பதிவாக இந்நூலாசிரியர் சினுவ அச்சிபி செய்துள்ளார் தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியர் ச. வின்சன்ட்  இன்னும் கொஞ்சம் எளிமையாக செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.


உமோபியா என்ற ஊரில் வாழும் ஒன்பது இன பழங்குடியினரின் வாழ்வும் வீழ்ச்சியும் பற்றிய நிகழ்ச்சிகளை ஆக்கன்கோ என்ற மல்யுத்தர் அவரின் தந்தையார், மூன்று மனைவிகள் , உனோகா, ஆப்ரியக்கா, என்சிமா,ஆக்கன்கோவின் மகனாக நிவோயி, வளர்ப்பு மகனாக தன்கையால் வெட்டுப்பட்டு உயிரிழக்கும் அய்க்கம் ஃபுனா ,  போன்றவரின் வாயிலாக நாவலை விரிவாக சொல்லியுள்ளார்.

 

நமது முன்னோர்கள் வழக்கப்படி ஊர் எல்லை சாமிகளான, மாரியம்மன், முனியாண்டவர். பேச்சியம்மன், அய்யானார் போல இந்தியா முழுவதும், தமிழகம் முழுவதும் இது போல குல தெய்வங்கள் வழிபாடு பல நூற்றாண்டுகளாக இப்பவும் பல தலமுறைகளாக தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு நடைபெற்று வருகிறது வருடத்தில் குறிப்பிட்ட மாதத்தில் ஒவ்வரு ஊரிலும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது . அக்காலத்தில் எந்தவித தகவல் தொடர்புகளும் இல்லாத போதே உலகம் முழுவதும் இது போல சடங்குகளும் , எல்லைத் தெய்வ வழிபாடும், முன்னோர்வழிபாடுகளும் ஏறக்குறைய ஒரே போல் ஒரு சில விஷயங்களை தவிர இருப்பது ஆச்சர்யம் கலந்த பிரமிப்பு இதை ஆன்மீகமாக அனுகுவதே நன்மைதரும் அறிவியல் பூர்வமாக அனுகினால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியாது.

உதாரணமாக நம்மூரில் சாமியாடுவது திடீரென்று கூட்டத்தில் சில பெண்கள் நாக்கை கடித்தபடி சாமியாடுவது அல்லது தன்னுணர்வற்று ஆடுவது , ஆப்ரிக்காவில் பூசாரி அல்லது எக்வுக்கள் என்று சொல்லக்கூடிய முன்னோர்கள் தங்களுக்குள் ஆவியாக இருப்பதாக நம்புவதும் சற்றேறக்குறைய ஒன்று தான்.

ஒரு முப்பதாண்டுக்கு முன்பு கூட சுடுகாட்டை சுற்றி பெரிய அளவில் எதுவும் இருக்காது பொட்டல்காடாகவோ , காடாகவோ, ஒற்றையடி பாதையோடு கூடிய ஊருக்கு வெளிபுறமாக ஒரு இடமாக வைத்திருப்பர் அங்கு அதிகமான மக்கள் நடமாட்டமே இருக்காது , இப்போது இடநெருக்கடியால் சுடுகாட்டை சுற்றியும் வீடுகள் வந்து விட்டது இது தீய காட்டில் வெள்ளையர்கள் கோவிலை கட்டி ஆவிகள் என்பது இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக நடந்து மதமாற்றம் வெகுவிரைவாக நடைபெற உதவியது.

நாகரீகம் வெள்ளையர்களால் மட்டும் மேம்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது பல தலமுறைகளாக சமுதாய சிக்கல்களை  கண்டு அதை சரி செய்யும் பொருட்டு நடந்த பல் வேறு ஒருங்கிணப்பால் தற்போதய நாகரீகம் மேம்பட்டதாக தெரியலாம். பழங்குடியினர் வாழ்ந்த போது தனக்கும் இயற்கைக்கும் ஒரு இணக்கம் வேண்டும் என அவர்கள் மழையையும், சூரியனையும் தமக்கு நெருக்கமானதாக கொண்டு வாழ்ந்ததையும், கருணை கிழங்கு அங்கு பயிரிடும் முறையையும் பல்வேறு காலகட்டங்களில் மனதிற்கு நெருக்கமாக உணரும் படி பதிவு செய்துள்ளார்

அங்கு வாழ்ந்த மனிதர்கள் குறிப்பாக ஆண்கள் பல மனைவியரை மணந்து அதிகமான பிள்ளைகுட்டிளோடு வாழ்வதும் . அக்காலாட்டத்தில் பரவலாக பெண்ணடிமை இருந்தது எனவும் அது எல்லா இன அடுக்குளிலும் இருந்தது என்பதையும் பெண்கள் விவசாயத்திற்கு உதவியாகவும், வீட்டில் சமையல் செய்யவும் பழக்கப்பட்டிருந்தனர் , பெண்கள் அதிகம் 16 வயதிற்குள் திருமணம் முடித்துவைக்கப்பட்டனர்

திருமணத்தின் நிகழ்ச்சிகளை நடைமுறைகளை விளக்கியதும் நன்று.

திருமண விருந்தில்   "பனைமர "கள்" உபயோகப்படுத்தபட்டது. அதில் மணமகளும், பெண்களும் கள் அருந்தினர் என்பதும் அதிசயமான செய்தியல்ல. 

வெள்ளையர் நாட்டில் புகுந்ததுடன் அவர்கள் பழங்குடியினரை நாகரீகமற்றவர்கள் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணத்தோடு  மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதாலும் அங்கே பிரிவினையும் சண்டையும் நிகழ்ந்தால் அதிகம் இழந்தது மண்ணின் மைந்தர்களே . ஏதோ காரணத்திற்காக


வந்தவர்கள் அங்குள்ள மக்களை மதமாற்றத்திலும் அடக்குமுறையாலும் அடிமைப் பத்தபட்டு , கறுப்பு வெள்ளை என இனபிளவை உண்டாக்கி விட்டனர். அவர்கள் கடவுள் பெரியவர் உயர்ந்தவர் என்ற கருத்தை புகுத்தி ஏறக்குறைய இரு மதங்களும் அதாவது இஸ்லாமும் , கிருத்துவமும் ஆப்ரிக்காவில் முழுவதுமாக மதம் மாற்றிவிட்டனர் அங்கு பழங்குடியினர் மிகச்சிறுபான்மையினத்தவராக மாற்றப்பட்டு சலுகைகள் எதிர்பார்க்க வைத்து விட்டனர்.

 ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடிமைத்தனமாக வைத்திருக்க இன அடிப்படையிலும், மத அடிப்படையிலும் கை வைத்தால் போதும் அச்சமூகத்தை அடிமையாக மாற்ற முடியும் , நல்ல வேளை இந்தியாவில் நமது பண்பாடு பழக்கவழக்கங்களை மாற்றவே முடியாது போனது நமது நல்ல நேரம் எனலாம்.


எனிக்கோ என்ற பறவையை நீ ஏன் பறந்துகொண்டே இருக்கிறாய் என்று கேட்டதற்கு அது மனிதர்கள் குறி தவறாமல் சுடப் பழகிக்கொண்டார்கள், நான் மரக்கிளையில் உட்காராமல் பழகிக்கொண்டேன் என்றாதாம் 

என்ற வரிகளை படிக்கும் போது தான் அதன் உள்ளே இருந்த உண்மையை கண்டுகொண்டேன்.

இயற்கை என்னும் உண்மையை யாரும் எக்காலத்திலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது அது பல உருவங்களில் மாறிமாறி தன்னை தகவமைக்கவும்  பாதுகாத்துக்கொள்ளவும்சக்தி கொண்டது மனிதன் அதை எக்காலமும் மாற்றவோ அழிக்கவோ முடியாது.

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...